"கல்யாண வீட்டுல என்ன கலாட்டா?''
"மொபலைப் பார்த்துக்கிட்டே மாப்பிள்ளை சாஸ்திரி கழுத்திலே தாலி கட்டிட்டாராம்''
- ம.வேதவள்ளி, பொரவச்சேரி.
"டாக்டர் எப்பவும் ஆன்ட்ராய்டு போனுமா, கையுமா இருக்காரே?''
"பேஷண்டுகளுக்காகத்தான். கூகுளில் சர்ச் பண்ணி மருந்து எழுதித் தருவார்''
**
"பேய்ப்படம் எடுத்தது தப்பாப் போச்சுன்னு சொல்றீங்களே... ஏன்?''
"தினமும் ஒரு பேய் வந்து என்னை மிரட்டிட்டுப் போகுது''
- கு.அருணாசலம், தென்காசி.
கண்டக்டர்: அடுத்த ஸ்டாப்புல செக்கர் ஏறுவாரு. எல்லாரும் டிக்கெட் எடுத்திடுங்க.
பயணிகள்: செக்கருக்கு நாங்க ஏன் டிக்கெட் எடுக்கணும்?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
"உப்பு, காரத்தை தவிர்த்துடுங்க...இனிப்பு புளிப்பை மறந்துடுங்க''
"துவர்ப்பு, கசப்பை விட்டுட்டீங்களே டாக்டர்''
- வி.ரேவதி, தஞ்சாவூர்.
"புட்டிப்பாலை விட தாய்ப்பால்தான் சிறந்தது...''
"ஆமாம் டாக்டர்... புட்டிப்பால்ன்னா பாட்டில் அப்பப்ப அழுக்காயிடுது. புட்டியைக் கழுவிக்கிட்டே இருக்க வேண்டியிருக்கு''
- அமுதா அசோக்ராஜா.
காதலன்: எங்க குடும்பத்துல நம்ம கல்யாணத்தை நடத்தவிட மாட்டாங்க போலிருக்கே..
காதலி: நம்ம கல்யாணத்தை யார் தடுத்து நிறுத்தப் போறாங்க?
காதலன்: என் மனைவியும் மாமியாரும்தான்.
**
நீதிபதி: பார்த்தா அப்பாவியா தெரியுற... நீயா பிக்பாக்கெட்? நம்பவே முடியலையே
திருடன்: உங்களை மாதிரிதான்ங்க...எல்லாரும் ஏமாந்துடுறாங்க
- உமர் ஃபாரூக், கடையநல்லூர்.
"டிவி கடையிலே ரிமோட் கேட்டதுக்கு அதெல்லாம் இனிமேல்தான் கண்டுபிடிக்கணும்னு சொன்னாங்களா? அப்படியென்ன ரிமோட் கேட்டீங்க?''
"பொண்டாட்டி வாயை மியூட்ல போடுற மாதிரி ரிமோட் இருக்கான்னு கேட்டேன்''
- வி.ரேவதி, தஞ்சாவூர்.
"இனி உன் புடவையை வேலைக்காரிக்குக் கொடுக்காதே''
"ஏங்க?''
"அவ துடைப்பத்தை எடுத்துக்கிட்டு வர்றதைப் பார்த்து பயந்துட்டேன்''
- தீ.அசோகன், சென்னை-19.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

24 மணி நேரத்தில் 3வது கப்பல் மீது தாக்குதல்! ஹோர்முஸ் நீரிணையில் மீண்டும் பதற்றம்!

இந்தோனேசியாவின் உயரிய விருதினை வழங்கி பிரதமர் மோடிக்கு கெளரவிப்பு - புகைப்படங்கள்

இந்தோனேசியாவில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்

ராமர் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை: காங்கிரஸ்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



