தமிழர் விரோத சக்திகளுக்கு எதிராக நிற்பவர் சகோதரர் ஸ்டாலின்: ராகுல் காந்தி பதிவு!தொகுதி மறுவரையறை: திமுக தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் - இந்திய கம்யூ.தொகுதி மறுவரையறை மசோதா: மு. க. ஸ்டாலினை சந்திக்கும் சோனியா, கார்கே?தொகுதி மறுவரையறை: மு.க. ஸ்டாலினை சந்திக்கும் மமதா பானர்ஜி!திருப்பரங்குன்றம்: உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே பொதுமக்கள் தீபமேற்ற அனுமதி!நகைக் கடைகளில் இரவில் அதிக அளவில் பணத்தை இருப்பு வைத்திருக்க வேண்டாம்: சென்னை காவல் துறை அறிவுரை

நாம் விட்டுச் சென்றது பாலைவனம் அல்ல; சோலைவனம்: செல்வப்பெருந்தகை

காங்கிரஸ் தலைவர்கள் இன்று மு. க. ஸ்டாலினை சந்திக்கவுள்ள நிலையில் செல்வப்பெருந்தகை பதிவு.

selvaperunthagai

செல்வப்பெருந்தகை. - கோப்புப் படம்

Updated On :

தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் தலைவர்கள் இன்று (நவ. 29) மு. க. ஸ்டாலினை சந்திக்கவுள்ள நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை பதிவிட்டுள்ளார்.

தொகுதி மறுசீரமைப்புடன் இணைந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு, ஆதரவளிக்கவுள்ளதாக திமுக நேற்று அறிவித்திருந்த நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் இன்று (நவ. 29) சந்தித்துப் பேசவுள்ளனர்.

”இந்தியா கூட்டணியின் மூத்த தலைவர்களுடன் நானும் சென்னைக்குச் சென்று, மு.க. ஸ்டாலினைச் சந்தித்து, தொகுதி மறுவரையறை தொடர்பான அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதாக்களை எதிர்க்குமாறு அவரிடமும் திமுகவிடமும் கோரிக்கை விடுக்க இருக்கிறோம்” என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”அற்ற குளத்து அறுநீர்ப் பறவைகளே! நாம் விட்டுச் சென்றது பாலைவனம் அல்ல; சோலைவனம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

தொகுதி மறுசீரமைப்புடன் இணைந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா தொடர்பாக, காங்கிரஸ் தலைவர்கள் மு. க. ஸ்டாலினை இன்று (நவ. 29) சந்திக்கவுள்ள நிலையில், செல்வப்பெருந்தகையின் பதிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

Summary

Selvaperunthagai posts ahead of Congress leaders' scheduled meeting with M. K. Stalin today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.