கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

ஆப்பத்திற்கு  மாவு அரைக்கும் போது இதை கவனிக்கவும்!

போளி தட்டும் போது வாழை இலையின் பின் பக்கமாகத் தட்டினால் இலை சுருங்காமல்  போளி நன்றாக வரும்.

News image
Updated On :15 பிப்ரவரி 2019, 4:28 pm IST
  • போளி தட்டும் போது வாழை இலையின் பின் பக்கமாகத் தட்டினால் இலை சுருங்காமல்  போளி நன்றாக வரும்.
  • கொதிக்கும் பாலை உடனே உறை ஊற்ற வேண்டுமாயின் ஒரு துண்டு வாழைப்பட்டையை நறுக்கிப்  போட்டு மோர்  ஊற்ற வேண்டும்.
  • தீய்ந்தப்  பாலில்  சூடு  ஆறும் முன்னர்  மிளகைத் தட்டிப் போட்டால் பாலின் ருசி மாறாமல்  இருக்கும்.
  • கேக்  அல்லது  பிஸ்கட்  செய்து முடித்தபின்  ஓவன் சூடாகவே  இருக்கும். பழைய பிஸ்கட், முறுக்கு போன்றவற்றை உள்ளே வைத்தால் புதிது போன்று மொரமொரப்பாக  இருக்கும்.
  • ரசத்திற்கு தாளிக்கும் பொழுது சிறிது நெய்யில் கடுகுடன் நான்கைந்து முழு மிளகையும்  சேர்த்துத் தாளித்தால்  ரசம்  மணக்கும்.
  • மகிழம்பூ அச்சில் முறுக்கு செய்யும் போது தேங்காய்ப் பாலில் சிறிது  சர்க்கரையைக்  கலந்து பிசைந்தால்  முறுக்கு  அதிகச் சுவையுடன்  இருக்கும்.
  • புட்டு மிருதுவாக  இருக்க மூன்றில்  ஒருபாகம்  புழுங்கல்  அரிசியையும்,   இரண்டு பாகம்  பச்சை  அரிசியையும்  மாவாக்கி  தயார்  செய்ய வேண்டும்.
  • உளுந்து வடை மாவு நெகிழ்ந்து விட்டால் ஒரு பிடி மெது அவலைக் கலந்து தட்டினால் தட்ட இலகுவாகவும் வடையின் மிருதுத்தன்மை குறையாமலும் இருக்கும்.
  • ஆப்பத்திற்கு  மாவு அரைக்கும் போது,  பச்சரிசியை  ஊற வைத்து  அதனுடன் ஒரு மூடி தேங்காய்த் துருவல், ஒரு கரண்டி பழைய சாதம் முதலியவற்றையும் போட்டு அரைத்தால் ஆப்பம்  வாசனையாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
  • வெண்டைக்காய்,  சேப்பங்கிழங்கு  இவற்றை வதக்கும்போது  கொஞ்சம் கடலை மாவைத் தூவி வதக்கினால்  பொரியல்  கொழகொழவென்று  சேராமல் சிவந்து மொறு மொறுவென்று இருக்கும்;  எண்ணெய்யும்  அதிகம் தேவைப்படாது.
  • தேங்காய்ச் சட்னி தயார்  செய்யும் போது  புளி சேர்ப்பதற்கு பதிலாக எலுமிச்சம் சாறை  பிழிந்து  விடுங்கள்.  சட்னி சாப்பிடுவதற்கு  மிகவும்  ருசியாக இருக்கும்.
  • குழம்பு,  பொரியல்  செய்வதற்கு  தக்காளியை நறுக்கும்போது   மிகவும் பொடியாக நறுக்கி  சமைத்தால் விரைவில்  வெந்துவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.