அம்மாவுக்குத் திருமணம் செய்து வைத்த மகன்! ஒரு நெகிழ்ச்சியான சம்பவம்

இப்படி ஒரு பதிவை போட வேண்டுமா என நீண்ட யோசனைக்குப் பிற்குதான் இதை எழுதுகிறேன்.
அம்மாவுக்குத் திருமணம் செய்து வைத்த மகன்! ஒரு நெகிழ்ச்சியான சம்பவம்
Published on
Updated on
2 min read

இப்படி ஒரு பதிவை போட வேண்டுமா என்ற நீண்ட யோசனைக்குப் பிறகுதான் இதை எழுதுகிறேன். இரண்டாவது திருமணம் என்பதை இன்றளவும் ஏற்றுக் கொள்ளாத மனம் உள்ளவர்கள் அநேகம் பேர் உள்ளனர்.  ஆனாலும் வாழ்க்கை முழுவதும் எனக்காகவே தியாகம் செய்த என் அம்மாவுக்கு திரும்ப ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நான் இருந்தேன்.

என் தந்தை அடிக்கடி கோபம் கொள்பவர். அவரால் கண்மண் தெரியாமல் அடிவாங்கி, ரத்த காயம்பட்டு நிற்கும் அம்மாவைப் பார்க்கும் போது, ஏன் இதையெல்லாம் பொறுத்துக் கொள்கிறீர்கள்? என்று கேட்பேன். உனக்காகத்தான் என்பார். இனியும் கூட இதை பொறுத்துக் கொள்வேன் என்றும் பதில் சொல்வார்.

அன்று அம்மாவின் கையைப் பற்றி வீட்டிலிருந்து வெளியேறிய போது நினைத்தேன், இனி அம்மாவின் வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று. எனக்காக தன்னுடைய வாழ்க்கையை தியாகம் செய்த அம்மாவுக்கு நிறைய கனவுகளும் ஆசைகளும் உண்டு. அவை இனி நிறைவேறும். இதை மறைத்து வைக்க வேண்டும் எனத் தோன்றவில்லை. எனவேதான் இந்த பதிவு, ஹேப்பி மேரீட் லைஃப் மாம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த கொட்டியத்தைச் சேர்ந்தவர் பள்ளி ஆசிரியை மினியின் மகன்தான் கோகுல். மினியின் கணவர் ஸ்ரீதர் மனைவியை அடித்து துன்புறுத்தி இருக்கிறார். இதை தனது சிறு வயது முதல் பார்த்திருக்கிறார் கோகுல். கருத்து வேறுபாடு, சண்டை என இளம் வயதிலேயே பெற்றோரின் பிரச்னையை நேரடியாக பார்த்து வளர்ந்தார் கோகுல். அவர் பத்தாம் வகுப்பு படிக்கும்போது மினி ஸ்ரீதருக்கு விவாகரத்து ஆனது. மகனை நன்கு படிக்க வைத்து பெரிய ஆளாக்க வேண்டும் என்பதே மினியின் கனவு. அதற்காக தன் முழு நேரத்தையும் செலவிட்டார் மினி. தற்போது பி.டெக் வரை படித்துவிட்டு வேலைத் தேடிக் கொண்டிருக்கும் கோகுல், தனக்கான கஷ்டங்களை சகித்துக் கொண்டு வாழ்ந்த அம்மாவின் மகிழ்ச்சியை மீட்டெடுக்க் முடிவு செய்தார். தன் தாய்க்கு இரண்டாம் திருமணம் செய்து வைத்துள்ளார் இந்த அன்பு மகன். அதன் பின் தன் முகநூலில் இந்த செய்தியை அனைவரிடமும் மேற்சொன்ன பதிவை எழுதி பகிர்ந்துள்ளார். இது கேரள மக்களிடையே மட்டுமல்லாமல் ஃபேஸ்புக் மூழுவதும் வைரலாகியது. பல்வேறு தரப்பிலிருந்து கோகுலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

தன் அடுத்த இலக்கு தன் அம்மாவுக்குள் இருக்கும் எழுத்தாளர் ஆசையை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதுதான் என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் கோகுல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com