வங்காளத்தில் வலுத்து வரும் ஜெய் ஸ்ரீராம் கோஷம், மக்களை அடிக்கவே பயன்படுகிறது: பொருளாதார மேதை அமர்த்தியா சென்! 

என் 4 வயதுப் பேத்தியிடம் கேட்டேன், உனக்குப் பிடித்த கடவுள் யார் என்று? அதற்கு அவள் சொன்ன பதில் துர்க்கா மாதா. துர்க்கை வழிபாட்டுக்கும் ராம நவமி வழிபாடுகளுக்கும் மிகப்பெரிய வித்யாசங்கள் இருக்கின்றன.
வங்காளத்தில் வலுத்து வரும் ஜெய் ஸ்ரீராம் கோஷம், மக்களை அடிக்கவே பயன்படுகிறது: பொருளாதார மேதை அமர்த்தியா சென்! 
Published on
Updated on
1 min read

வங்காளத்தில் என்றுமில்லாத வகையில் சமீப காலங்களில் ஜெஸ்ரீராம் கோஷம் வலுத்து வருகிறது. இது பக்தியின் அடையாளமாகத் தெரியவில்லை. மக்களை அடிப்பதற்காகவே இந்த கோஷத்தைப் பயனப்டுத்தி வருகிறார்கள் என்று தோன்றுகிறது. வங்காளிகள் சக்தி உபாஷகர்கள். அவர்கள் பூஜிப்பது அன்னை துர்க்கையை. என் 4 வயதுப் பேத்தியிடம் கேட்டேன், உனக்குப் பிடித்த கடவுள் யார் என்று? அதற்கு அவள் சொன்ன பதில் துர்க்கா மாதா. துர்க்கை வழிபாட்டுக்கும் ராம நவமி வழிபாடுகளுக்கும் மிகப்பெரிய வித்யாசங்கள் இருக்கின்றன. முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போது கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் ராம நவமி பூஜைகள் அதிகமாகக் கொண்டாடப்படுவது நான் கண்டறிந்திராத ஒன்று, பிற மதங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு நடமாடவே அச்சப்படக்கூடிய விதத்திலான சூழல் இப்போது இங்கு நிலவுகின்றது... என்று பொருளாதார மேதையும் நோபல் பரிசு பெற்ற தத்துவவியலாளருமான அமர்த்தியா சென் சமீபத்தில் தான் கலந்துகொண்டு பேசிய நிகழ்வொன்றில் தெரிவித்துள்ளார்.

அமர்த்தியா சென்னின் கூற்றை எதிர்க்கும் வகையில் மேற்கு வங்க பாஜக தலைவரான திலீப் கோஷ், அமர்த்தியா சென்னுக்கு பெங்காலி கலாச்சாரம் அல்ல இந்தியக் கலாச்சாரமாவது கொஞ்சம் தெரியுமா? எதையுமே அறிந்திராத ஒருவரின் பேச்சு போல இருக்கிறது அவரது கூற்று... எனப் பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com