பாட்டில் சேலஞ்சை அடுத்து டிக் டாக்கில் களை கட்டும் சைக்கிளோ சைக்கிள் சேலஞ்ச்!
By RKV | Published On : 06th July 2019 12:54 PM | Last Updated : 06th July 2019 12:54 PM | அ+அ அ- |

சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் களை கட்டிய பாட்டில் சேலஞ்சை அடுத்து தற்போது சைக்கிளோ சைக்கிள் சேலஞ்ச் எனும் புது விதமான சேலஞ்ச் படு விரைவாக இணையத்தில் பரவி வருகிறது.
டிக் டாக் பிரபலங்கள் பலரும் தங்களது சைக்கிளோ சைக்கிள் விடியோவைப் பதிவேற்றி வருகிறார்கள். ஆதிவாசி கானா பாடல் ரகத்தைச் சேர்ந்த இந்தப் பாடல் நாட்டுப்புறப் பாடல்களுக்குண்டான குதூகலத்துடன் ஒலிக்கிறது.
குழந்தைகள் கைகளை சைக்கிள் ஹேண்ட்பார்களைப் போல வைத்துக் கொண்டு சைக்கிள் ஓட்டுவது போன்றதான பாவனையுடன் பின்னணியில் சைக்கிளோ சைக்கிள் எனும் ஆதிவாசிப் பாடல் ஒலிக்க நடனமாடுவது தான் சைக்கிளோ சைக்கிள் சேலஞ்ச்.