முகப்பு லைஃப்ஸ்டைல் செய்திகள்
‘நாய் கடிச்சா, கடிச்ச நாயைத் நீங்க திரும்பக் கடிங்க’ நாய்க்கடிக்கு சிகிச்சை பெற வந்த பெண்ணிடம் நக்கலடித்த அரசு மருத்துவர்!
By RKV | Published On : 02nd July 2019 11:13 AM | Last Updated : 02nd July 2019 11:13 AM | அ+அ அ- |

அஜ்மீரில் பெண்ணொருவர் நாய்க்கடிக்கு சிகிச்சை பெற அரசு மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். அங்கு அப்போது பணியில் இருந்த அரசு மருத்துவர் பிரவீன்குமார் பலோசியா, அந்தப் பெண்ணுக்கு நாய்க்கடிக்கு சிகிச்சை அளிப்பதற்கு பதிலாக, ‘நாய்க்கடித்து விட்டதா, அப்படியானால் எந்த நாய் உங்களைக் கடித்ததோ, அந்த நாயைத் தேடிச் சென்று நீங்கள் திரும்பக் கடித்து விடுங்கள்’ என்று பதில் அளித்திருக்கிறார். இதனால் மிகுந்த கோபத்திற்கு உள்ளான அந்தப் பெண்மணி சம்மந்தப் பட்ட மருத்துவரை சரமாரியாகத் திட்டத் தொடங்க, கோபமடைந்த மருத்துவர் சிகிச்சை பெற வந்த பெண்ணின் மீது எஸ் எஸ்டி பிரிவினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறையில் புகார் அளிக்கும் நிலைக்குச் சென்றார்.
இது தொடர்பான விடியோ ஒன்று தற்போது இணையத்தில் படு வேகமாகப் பரவி வருகிறது. உண்மையில் அங்கு என்ன நிகழ்ந்தது என்பது குறித்துத் தெளிவான தகவல்கள் ஏதும் இல்லை.
அரசு மருத்துவமனையில் நாய்க்கடிக்கு சிகிச்சை பெற வந்த பெண்மணி, அங்கிருந்த மருத்துவரின் ஜாதி குறித்து இழிவாகப் பேசியதாகவும் அதனால் தான் மருத்துவர் அந்தப் பெண்ணிடம் அவ்விதமாக நடந்து கொண்டார் எனவும் ஒரு சாரர் கூறுகின்றனர். உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்து அறிய 5 நபர் கொண்ட விசாரணைக் குழுவொன்றை அமைக்க தற்போது உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தகவல்.
Video Courtesy: Times of india