மானியமில்லாத கேஸ் சிலிண்டரின் விலை குறைப்பு!

கேஸ் சிலிண்டரின் விலை சந்தை நிலவரத்துக்கு ஏற்ப அவ்வப்போது ஏற்ற இறங்கங்களைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று முதல் சிலிண்டர் ரூ.637-க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மானியமில்லாத கேஸ் சிலிண்டரின் விலை ரூ.737.50லிருந்து, ரூ.100 குறைக்கப்பட்டு தற்போது 637 ரூபாய்க்கு கிடைக்கிறது. 

மானியமில்லாத சிலிண்டர்கள் ரூ.100.50 காசுகள் குறைக்கப்பட்டு தற்போது ரூ.637க்கு விற்பனையாகிறது என்று இந்தியன் ஆயில் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதே சமயம் மானியத்துடன் கூடிய கேஸ் சிலிண்டரின் விலையில் மாற்றமின்றி ரூ.494.35-க்கு விற்பனை செய்யப்படும் என்று இந்தியன் ஆயில் எண்ணெய் நிறுவனம் அறிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வந்தது.

சர்சதேசச் சந்தையில் ஏற்பட்ட விலை மாற்றத்தின் காரணமாக இந்த விலை குறைப்பு ஏற்பட்டுள்ளதாக எரிவாயு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் எல்பிஜி சிலிண்டரின் விலை 3.65 சதவீதமாக உயர்த்தப்பட்டது. விலை உயர்த்தப்பட்டு ஒரு மாதத்திற்குப் பிறகு இந்த விலை குறைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் ரூ.25 வரை உயர்த்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com