மெகாத்தொடர் அடிக்ட் பெண்களுக்கு, அண்ணன் சீமானின் உருக்கமான அட்வைஸ்!
By RKV | Published On : 21st June 2019 04:51 PM | Last Updated : 21st June 2019 04:51 PM | அ+அ அ- |

தொலைக்காட்சியில் என் உடன்பிறந்தார்கள் நீங்களாவது இந்தத் தொடர்களைப் பார்ப்பதை ஒழிச்சி விடுங்க.
பெரிய மனநோய் அது. என்னுடைய நண்பர், என்னை வச்சு படம் எடுக்கனும்னு வந்தார். வந்தவர், போயிட்டு வர்றண்ணே, வந்து படம் எடுப்போம்னு போனவர், போனவர் தான், ஒரு ஆறு மாசமா வரல. திருப்பி ஒருநாள் வந்தார். வந்தவர் ரொம்ப மனச்சோர்வுல இருந்தார். என்னன்னு கேட்டா,
'என் மனைவிக்கு மனநிலை சரியில்லாம போயிருச்சிண்ணே, அதனால, நான் மருத்துவமனைல வச்சு வைத்தியம் பார்த்து குணப்படுத்தி கொண்டு வர இவ்ளோ நாள் ஆச்சுண்ணே... அப்படின்னார்.'
என்ன நடந்துச்சுன்னு கேட்டா,
'ஒண்ணுமில்லண்ணே தொடர்ச்சியா இந்த சீரியல் பார்ப்பாண்ணே, பார்க்கும் போதுன்னு சொல்லிட்டே நடிச்சிக் காமிக்கிறார். (தொடர் பார்க்கும் தன் மனைவி என்ன செய்வாங்கன்னு)
அரிசி களைஞ்சிக்கிட்டே...
பாருங்க இப்படி, நீங்களுமே பார்க்கலாம்.
’வர்றா, பார்த்தியளா, என்ன பேசறா, என்ன பேசறா, ஏண்டீ அவ கூடல்லாம் எதுக்குடீ பேசிட்டிருக்க? அவ என்ன பண்றா, என்ன பண்றா பாரு? இவ நாக்குல சனியன் பொறக்கன்னு சொல்லிட்டு
இப்பிடிக்காத் திரும்பி கத்தரிக்காய வெட்டறது...
உன்ன இப்படியே வச்சு கட்டைல நறுக்கனும்னு சொல்லிட்டு அவ கூட இந்த பாருங்க... இப்படியே அந்த கதாபாத்திரத்து கூடப் பேசிப் பேசிப் பேசி பேசி மனநோய் ஆயிருச்சு.
தனியா போகும் போது, அவ எதுக்காக அப்படி ஒரு கேள்விய கேட்டா? என்ன இவ என்ன பெரிய இவ? இவளும் தான் அவகிட்ட எதுக்குப் பேசறா?
பேசி என்னாகும்னா அவ வந்து ஒவ்வொரு கதாபாத்திரத்துல நடிச்சிட்டு காசு வாங்கிட்டு போய்டுவாளுங்க, இந்த ஒரு பொம்பள மொத்தக் கதாபாத்திரமும் நடிச்சு... அய்யய்யய்ய்யோ அவ்வளவும் மனநோய் கொண்டு போயிருது’ இதை எப்படி சரி செய்யறது பாருங்க?! இந்த சமூகத்துக்குள்ள தான் நாம ஒரு புரட்சிகரமான வேலையைச் செய்ய வேண்டியதாயிருக்கு! இதுல தான் நிறைய நேரம் நம்ம பெண்களுக்கு செலவாயிருது. நிறைய செலவாயிருது.