மெளனி ராய் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் ஹாட் மயூராசனா யோகா விடியோ!

பாலிவுட் நடிகைகள் பலரும் ஃபிட்னஸ் ஃப்ரீக்குகள் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர்களது உடலில் எப்போதும் கிள்ளி எடுக்கச் சதை இருக்காது. அத்தனை ஃபிட்டாக உடலைப் போஷிப்பார்கள்.
மெளனி ராய் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் ஹாட் மயூராசனா யோகா விடியோ!

பாலிவுட் நடிகைகள் பலரும் ஃபிட்னஸ் ஃப்ரீக்குகள் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர்களது உடலில் எப்போதும் கிள்ளி எடுக்கச் சதை இருக்காது. அத்தனை ஃபிட்டாக உடலைப் போஷிப்பார்கள். தீபிகா படுகோன் முதல் கரீனா கபூர் கான், அலியா பட், ஏன் நம்மூர் ஷ்ருதி ஹாசன் வரை அவர்கள் உடலைப் பேணும் முறையே தனி. ஃபிட்னஸில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டாலோ அல்லது போர் அடித்தாலோ உடனே இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என சமூக ஊடகங்களில் தங்களது வொர்க் அவுட் விடியோக்களைப் பதிவேற்றி, அந்த விடியோக்களுக்கு ரசிகர்களிடம் இருந்து கிடைக்கும் வரவேற்பில் உற்சாகமாகி மீண்டும் தொடர்ந்து ஃபிட்னஸ் குயின்கள் ஆகி விடுவார்கள். தீபிகா படுகோன், அனுஷ்கா ஷர்மா உள்ளிட்ட பலரும் வியர்க்க விறுவிறுக்க உடபயிற்சி செய்து தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் ஃபிட்னஸ் வீடியோக்களைப் பெருமையாகப் பகிரக்கூடியவர்களே! இப்போது இந்த லிஸ்டில் லேட்டஸ்டாக இணைந்திருக்கிறார் டெலிவிஷன் நடிகையான மெளனி ராய். நாகினி பார்ட் 1 & 2 வில் நாகினியாக வந்து அசத்திய இந்தப் பெண்ணுக்கெனத் தனியாக ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

மெளனி சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பிஞ்சா மயூராசானா என்றொரு யோகாசன விடியோவைப் பகிர்ந்திருக்கிறார்.

மயூராசனா என்றால் மயில் போல தோற்றமளிக்கும் ஆசனவகைகளில் ஒன்று என்று அர்த்தம். யோகாவில் பத்மாசனா, ஹனுமனாசனா, விருக்‌ஷாசனா, உக்கடாசனா,  இப்படிப் பலவகை ஆசனங்கள் உள்ளன. இதில் மயில் போன்ற தோற்றமளிக்கும் மயூராசனாவை பயிற்சி செய்வது சற்றுக் கடினமான காரியம் தான். அதைப் பயிற்சி செய்ய வேண்டுமென்றால் ஊசி போல உடல் இருக்க வேண்டும். மெளனி ராய் இந்த ஆசனத்தைச் செய்து காட்டியதில் அதிசயம் இல்லை. ஆனால், இதைப் பார்த்து விட்டு அவரது ரசிகர்கள் எவரேனும் ஆர்வக் கோளாறில் இதை முயன்று விட வேண்டாம். 

ஏனெனில், மயூராசனப் பயிற்சிக்கு என சில வரயறைகள் உள்ளன.

உயர் ரத்த அழுத்தம், தண்டுவடத்தில் காயம்,, தோள், தடக்கை, கழுத்து என எங்காவது காயம் இருந்தாலும் சரி இந்த ஆசனத்தை முயற்சிக்காமல் இருப்பது நல்லது.

பிஞ்சா மயூராசனத்தின் ஹெல்த் பெனிஃபிட்: 

பிருஷ்டம், தோள்பட்டை, கைகளை வலுவாக்கும். சுவாச உறுப்புகள், ரத்தக்குழாய்கள், தோள்பட்டை ரத்த நாளங்களை விரிவடையச் செய்து உடலுக்குப் புத்துணர்வு அளிக்கும்.

மெளனி ராய் திடீரென யோக விடியோ பகிர்ந்ததின் காரணம் என்ன? நாளை சர்வதேச யோகம் தினம் அல்லவா? அதை முன்னிட்டுத் தான் தனது யோகா விடியோவை வெளியிட்டுச் சிறப்பித்திருக்கிறார் மெளனி ராய். கண்டு மகிழுங்கள் ரசிகசிகாமணிகளே. ஆனால் செய்து பார்க்க ஆசைப்பட்டீர்கள் என்றால் மேலே உள்ள எச்சரிக்கையை மறந்து விடாதீர்கள். யோகாசனங்களை தகுந்த ஆசிரியரின் வழிகாட்டுதலின்றி முயற்சிப்பது பிழையில் முடியலாம். எனவே தேர்ந்த பயிற்சியாளரிடம் எளிமையான ஆசனங்களில் இருந்து கற்றுக் கொள்ளத் தொடங்கி பிறகு படிப்படியாக பிஞ்ச மயூராசனம் வரை முன்னேற நினைப்பதில் பிழை ஏதும் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com