சுடச்சுட

  
  Crazy-Mohan

   

   

   

  கிரேஸி மோகன் மறைந்த இன்றோடு 4 நாட்களாகின்றன. இப்போதும் நாம் அவரைப் பற்றிப் பேசிக்கொண்டு தான் இருக்கிறோம். இனியும் பேசிக் கொண்டு தான் இருக்கப் போகிறோம். மனிதர்களில் இத்தனை வெள்ளந்தியாக ஒருவரால் இருக்க முடியுமா? நிறைகுடமாக இத்தனை ஹாஸ்யத்தை நிரப்பிக் கொண்டு வலம் வர முடியுமா? என்று திகைப்பாக இருக்கிறது அவரது பழைய நேர்காணல்களை ஒவ்வொன்றாகக் காணும் போது... நம்மால் முடியக்கூடியது இனி அதுமட்டும் தானே!

  கிரேஸி மோகனை பெரும்பாலானோருக்கு நகைச்சுவை நடிகராக மட்டுமே தெரிந்திருக்கக் கூடும். அதைத் தாண்டி அவர் ஒரு சிறந்த ஓவியரும் கூட என்பது பலருக்குத் தெரியாது.

  இதைப் பற்றி கடந்தாண்டு எடுக்கப்பட்ட நேர்காணல் ஒன்றில் தொகுப்பாளர் ஒரு கேள்வியைக் கிரேஸியிடம் முன் வைக்கிறார். அதற்கு கிரேஸி மோகன் அளித்த காமெடி மத்தாப்பூ பதில் இதோ...

  எனக்கெப்படி ஓவியத்தின் மேல ஈடுபாடு வந்துதுன்னா, எங்க பக்கத்து வீட்டுப் பையன் மணியம் செல்வன், அவனோட அப்பா மணியம் இருக்கிறார்ல... பெரிய ஓவியர், அவரு ட்ராயிங் போடறச்சே பக்கத்துல இருந்து பார்த்துண்டிருக்கேன் நானு. அப்போ வந்து அவர் என்ன சொல்லிருக்கார்? ஏந்தம்பி நீ படிக்கிற புள்ள ,போய் பொஸ்தகத்த வச்சுண்டு வாசியேன், இதுக்கேண்டா டயத்த வேஸ்ட் பண்ற? எம்பையன் (அவர் பையன் மணியம் செல்வன் அப்போது பிரஸ்ஸே பிடிக்க மாட்டான் கையில) எம்பையன பிரஸ் பிடிக்கச் சொல்லு தம்பி என்பார் அவர். அவன் கார்த்தால பல் தேய்க்கறதுக்குப் பிரஸ்ஸப் பிடிச்சாத்தான் உண்டு. மத்தபடி இந்த பிரஸ்ஸ பிடிக்கவே மாட்டான் அவன்! நான் வந்து ஓவியனா மாறுனதுக்குக் காரணம் என்னன்னா? என் நண்பன் சு.ரவின்னு ஒருத்தன், புனேல இருக்கான், எனக்கு ‘அ’ ன சொல்லிக் கொடுத்துட்டு புனேக்குப் போயிட்டான் அவன். ரவி வர்மாவை எனக்கு இண்ட்ரடியூஸ் பண்ணதே ரவி தான். (இந்த ரவியைத்தான் தனது இணையப் பக்கத்தில் கம்பன் வீட்டுக் கஜானாப் பெட்டி என்று வரைந்து வைத்திருக்கிறார் கிரேஸி) நண்பர் ரவியின் மீது மோகனுக்கு இருக்கும் அபிமானமும், நேசமும் வரையறைக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது.

  அவ்வளவு ப்ரியம்!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai