தேர்தல் வெற்றிக்கு நன்றி நவில வயநாடு செல்லும் ராகுல்!

வயநாடு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ் அகில இந்தியத் தலைவர் ராகுல்காந்தி கேரளமாநிலம், வயநாடுக்கு வருகை தரவிருக்கிறார்
தேர்தல் வெற்றிக்கு நன்றி நவில வயநாடு செல்லும் ராகுல்!

2019 பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு வெற்றியைத் தேடித் தந்த வயநாடு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ் அகில இந்தியத் தலைவர் ராகுல்காந்தி கேரளமாநிலம், வயநாடுக்கு வருகை தரவிருக்கிறார். இத்தகவலை அவரது அதிகார பூர்வ ட்விட்டர் தளம் உறுதி செய்துள்ளது.

இன்று பிற்பகலில் வயநாடு வந்திறங்கும் ராகுல், அடுத்த 3 நாட்களுக்கு கேரள மாநில காங்கிரஸ் முக்கியஸ்தர்கள், தலைவர்கள், வாக்களித்து வெற்றிக்கனியைப் பறிக்க உதவிய பொது மக்கள் என அனைவரையும் சந்திக்கவிருக்கிறார்.

3 நாட்களுக்குள் சுமார் 15 பொது நிகழ்வுகளில் பங்கேற்று மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் ராகுல், ஞாயிறு வரையிலும் வயநாட்டில் பொதுமக்களையும், கட்சிக்காரர்களையும் சந்தித்து நிறைகுறைகளை அலசி ஆராயவிருப்பதாகத் தகவல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com