வாழ்நாளில் 3 முறை நடந்தே உலகைச் சுற்றும் மனிதர்கள்!
By RKV | Published On : 25th May 2019 03:22 PM | Last Updated : 25th May 2019 03:22 PM | அ+அ அ- |

ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எவ்வளவு தூரம் நடக்கிறான் என்று தெரியுமா?
சராசரியாக, ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் 74,580 மைல் தூரம் நடக்கிறான். இது உலகை மூன்று முறை சுற்றுவதற்குச் சமம் என்கின்றன அறிவியல் ஆய்வுகள். சராசரி மனிதன் நாளொன்றுக்கு மணிக்கு 3 முதல் 4 மைல்கள் வீதம் 96 மைல்கள் வரை நடக்கலாம்.
இன்று மனிதர்களின் இறப்பு வயது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. முன்பெல்லாம் நோய், விபத்து என்று ஏதாவது ஒரு காரணத்தை முன்னிட்டு மனிதனின் சராசரி மரண வயது 50 வயதுக்குள்ளாக இருந்து வந்தது. இன்று அந்த நிலை மாறியுள்ளது, பெரும்பாலான முதியவர்கள் 80 வயது தாண்டியும் உயிர் வாழ்கிறார்கள். அப்படிப் பட்ட சூழ்நிலையில் முதியவர்கள் ஆரோக்யமானவர்களாகவும், நடைபயிற்சியில் ஆர்வமுள்ளவர்களாகவும் இருந்தால் சராசரியாக அவர்களால் தங்கள் வாழ்நாளுக்குள் 5 முறை உலகைச் சுற்று வரக்கூடிய அளவுக்கு நடக்க முடியும் என்கிறது ஒரு கணிப்பு. பூமத்திய ரேகையை ஒட்டிய பூமியின் சுற்றளவு 24,901 மைல்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் 80 வயதுக்குள் ஒரு மனிதன் சராசரியாக 3 முறை உலகைச் சுற்றி வரத்தக்க அளவில் தன் வாழ்நாளில் நடைப்பயிற்சியை மேற்கொள்ள முடியும் என்கின்றன புவியியல் ஆய்வுகள்.