சான்ஸே இல்லை, ஆஹா என்ன ஒரு ஃபேஸியல் எக்ஸ்ப்ரஸன்! டிக்டாக் ட்ரெண்டிங் கிட்டு கோஸ்வாமி!

இந்தத் திறமை காரணமா இவங்களுக்கு சினிமா, சின்னத்திரை வாய்ப்புகள் கிடைச்சு இவங்க திறமையை உலகறிஞ்சா சரி.
சான்ஸே இல்லை, ஆஹா என்ன ஒரு ஃபேஸியல் எக்ஸ்ப்ரஸன்! டிக்டாக் ட்ரெண்டிங் கிட்டு கோஸ்வாமி!

ஆரம்பத்துல மின்னஞ்சல்னா என்னன்னே தெரியாம இருந்தோம். 2000 க்கு அப்புறமா தான் மின்னஞ்சல் பரவலாச்சு. அப்புறம் திடீர்னு ஆர்குட்னு வந்துச்சு, ஃபேஸ்புக் வந்துச்சு, கூகுள் பஸ், கூகுள் ப்ளஸ், ட்விட்டர், ஷேர் ஷாட், இன்ஸ்டாகிராம்னு என்னென்னவோ வந்துசு, இதுல சிலது தடை பண்ணிட்டாங்க. இப்போ புதுசா டிக் டாக் வந்துருக்கு. இந்த செயலி பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட தனிநபர் பயன்பாட்டுக்கு பாதுகாப்பாக இல்லை. சமுகச் சீர்கேட்டுக்கு தான் வழிவகுக்கும் அதனால உடனே தடை பண்ணனும்னாங்க. நீதிமன்றமும் தடை விதிச்சுச்சு. அப்புறம் ஏன் தடை விதிக்கிறீங்க, இதன் மூலமா, நடிக்க வாய்ப்பு கிடைக்காத எத்தனையோ பேருக்கு ஆத்ம திருப்தி கிடைக்குது. அவங்க தங்களோட திறமையை வெளிப்படுத்த இது ஒரு சாதனமா பயன்படுது, அதைப் போய் தடை செய்து என்ன பண்ணப்போறீங்கன்னு சிலர் புலம்பினாங்க. இப்போ டிக் டாக்குக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கிருச்சு. டிக் டாக் திறமைசாலிகள் இன்னும் அபாரமா தங்களோட திறமைகளை அந்தச் செயலி மூலமா பதிவு செஞ்சிட்டு வராங்க. இது ஒரு பக்கம் நடந்துட்டு இருந்தாலும் இன்னொரு பக்கம் ஒரு பொண்ணோட திருமண வாழ்க்கையை முடிச்சு வச்சு, அவங்க கணவரை விவாகரத்து வரை செல்லவும் இதே டிக் டாக் செயலி தான் தூண்டியிருக்கு. சரி, எந்த ஒரு செயலிலும் நன்மையும் இருக்கும், தீமையும் இருக்கும். அது நாம அதை எப்படிப் பயன்படுத்துறோம்கறதைப் பொருத்தது. இதுக்கு அந்த செயலியைக் குறை சொல்லி என்ன ஆகப்போகுதுங்கறாங்க சில நடுநிலைவாதிகள். அது சரி தலைவலியும், காய்ச்சலும் தனக்கு வந்தாத் தானே தெரியும். அடுத்தவங்க வாழ்க்கைன்னா அள்ளி அள்ளி வீசலாம் அட்வைஸ் மழையை.

அதெல்லாம் சரி, டிக்டாக்ல இப்போ என்ன புதுசாங்கறீங்களா? இதோ இந்தம்மிணி பேரு கிட்டு கோஸ்வாமியாம். இவங்களோட் டிக் டாக் விடியோஸ் இப்போ வைரல் ஆயிட்டிருக்குங்கறாங்க. காரணம் ஜாதி, மத வித்யாசம் இல்லாம இவங்க பண்ற டிக்டாக் விடியோக்களில் இவங்களோட முகபாவனைகளைப் பார்க்கும் யாருமே உடனே இம்ப்ரெஸ் ஆயிடறாங்களாம். அவ்ளோ அற்புதமா டிக்டாக் பண்றாங்களாம் இந்தம்மா.

சாம்பிளுக்கு நீங்களும் வேணா சிலதைப் பாருங்க...

இப்போதைக்கு டிக்டாப் சூப்பர் ஸ்டார் இந்தம்மா தான் போலிருக்கு.

அவங்களை டிக் டாக் சூப்பர் ஸ்டார் ஆக்கின டிக் டாக் விடியோ இது தான்.

இது தவிர இன்னும் நிறைய டிக்டாக் விடியோஸ் பண்ணிட்டே இருக்காங்க இந்தக்கா.

அவங்களுக்கான ரசிகர்களும் அதுக்கேத்தாப்போல அதிகரிச்சுட்டே இருக்காங்க. இதுவரை 8000க்கும் அதிகமான ஃபாலோயர்ஸ் இருக்காங்களாம்.

சரி, இந்தத் திறமை காரணமா இவங்களுக்கு சினிமா, சின்னத்திரை வாய்ப்புகள் கிடைச்சு இவங்க திறமையை உலகறிஞ்சா சரி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com