தங்க பிஸினஸில் ‘தொழில் ரகசியம்’ என்றால் என்ன? கேள்விக்கு வாசகர் பதில்!

ஒரு ஆசாரிக்கு, ஒருநாளில் 12 மணிநேரம் வேலை செய்தால், 1000 to 1200 ரூபாய் வரையில் கொடுக்கலாம். ஆனால், பொதுவாக, தங்கத்தை சேதாரம் அடிப்படையிலேயே ஆசாரிகள் கூலி வாங்குகிறார்கள்.
தங்க பிஸினஸில் ‘தொழில் ரகசியம்’ என்றால் என்ன? கேள்விக்கு வாசகர் பதில்!

நேற்று 20.06.19 அன்று தினமணி வாசகர்களிடையே ’ தங்க பிஸினஸில் ‘தொழில் ரகசியம்’ என்றால் என்ன? என்றொரு கேள்வியை எழுப்பியிருந்தோம். அதற்கு நகை வியாபாரி ஒருவர் தெளிவான பதிலை அளித்திருந்தார். அதை அனைத்து வாசகர்களும் அறிந்து கொள்ளும் பொருட்டு தனித்தகவலாகவே அளிக்கிறோம்.

நகை வாங்குபவர்களுக்கு நாம் ஏன் சேதாரத்திற்கென்று 10 % முதல் 18 % வரை கூடுதல் பணம் செலுத்த வேண்டும்? என்ற கேள்வி வழக்கமாகத் தோன்றி வருவதால் இந்தப் பதில் அவர்களுக்கு உதவலாம்.

தினமணி கேள்வி: 

வாசகர் பதில்: தங்கத்தொழிலில் மிகவும் தரமாக தொழில் செய்தால் அதிக லாபம் இல்லை என்பது தான் உண்மை. 

இதில் தொழில் ரகசியம் என்றும், மறைப்பதற்கு எண்டுறம் ஒண்டரம் இல்லை. அப்படி இருந்தால், இந்த தொழில் இவ்வளவு தூரம் வளர்ந்திருக்காது. 

முதலில் அனைவரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இதன் மூலப்பொருளான தங்கம் மிகவும் விலை உயர்ந்தது. இதை வாங்கி, சேமித்து, பொருளாக்கி, விற்று லாபம் பார்க்க வேண்டும். அதற்க்கு ஈடு செய்யும் வகையில் தான், இந்த லாபம் முறையாக கணக்கிடப்படுகிறது. 

முன்பு அதிகமாக கலப்படமும், தரமற்ற முறையும் கையாளப்பட்டது. இப்போது அப்படி இல்லை. 916 ஹால் மார்க் sealed நகைகள் விற்பனையில் உள்ளது. இத்தனைநாள் எதிலும் ஏமாற்ற முடியாது. வாடிக்கையாளர், தரமான நம்பிக்கையான இடத்தில தொடர்ந்து வாங்கினால், வாங்கும் பொருட்களின் தரம் நன்கு விளங்கும். 

இந்த சேதாரம் % விவகாரம் என்ன வென்றால், தங்க ஆசாரியார் கையால் செய்யும் நகைகள், machine make நகைகள், இவை இரண்டும் சேர்ந்த நகைகள், பம்பாய் டிசைன், கல்கத்தா டிசைன் நகைகள் என்று, பல விதமான நகைகள் உள்ளது. இதில் செய்யப்படும் நகைகளின், சிறிய அளவிலான தோடுகள், மோதிரம் தொடங்கி, பெரிய அளவிலான ஒட்டியாணம் வரையில் நகைகள் இருக்கும். இதில், பொருட்களின் வேலைப்பாடுகலின் அடிப்படையில், இந்த சேதாரம் அமைகிறது. 

உதாரணத்திற்கு, ஒரு நகைசெய்ய காய்ச்சும்போதும், உருக்கும் போதும், machine கட்டிங் செய்யும் போதும் தங்கம் wastage வரும் அது மிக குறைந்த அளவிலானது தான். ஆனால், பொருட்கள் சேயும் பொது, கம்பியாகவும், தகட்டாகவும், டிசைன் பூக்களாகவும் மெஷினில் கொடுத்து வாங்கும் பொது, சேதாரம் கொடுக்க வேண்டி வரும். இதெல்லாம் ஒன்றும் இல்லை, இவற்றையெல்லாம் விட, இதை எத்தனை நாள் அந்த ஆசாரி செய்கிரார் என்பதை கூலி அடிப்படையிலோ or சேதார அடிப்படையிலோ நிர்ணயம் செய்கிறார்கள். ஒரு ஆசாரிக்கு, ஒருநாளில் 12 மணிநேரம் வேலை செய்தால், 1000 to 1200 ரூபாய் வரையில் கொடுக்கலாம். ஆனால், பொதுவாக, தங்கத்தை சேதாரம் அடிப்படையிலேயே ஆசாரிகள் கூலி வாங்குகிறார்கள். அவர்கள், செய்யும் பொருளின் எடையின் % அடிப்படையில் தங்கமாக கொடுக்கப்படுகிறது. இதனால், Handmade நகை என்றால் அதிகபட்சமாக, 20 % வரையில் கூட சேதாரம் வரும். இதே Machine மாடே என்றால் குறைவாக சுமார் 4 % லிருந்து தொடங்கும். இந்த Machine மாடே நகை களுக்கு life குறைவு. ஆனால் பார்க்க நன்றாக இருக்கும். 

எனவே இந்த சேதாரம் போடுவது ஒன்றும் பெரிய தொழில் ரகசியம் இல்லை. எல்லாமே இப்போது கூலி அடிப்படையில் தான் நிர்ணயம் ஆகிறது. இப்போது தொழில் போட்டி வேறு உள்ளது. எனவே இதில் யாரும் பெரிய அளவில் ஏமாற்றம் செய்ய முடியாது. 

- kravi

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com