சுடச்சுட

  

  இந்த குட்டிப்பையன் மனசு தெய்வீகம்! அதுக்குத் தான் 1 லட்சம் லைக்கும், 76,000 ஷேரிங்கும்!

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 04th April 2019 04:14 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  mizoram_boy

   

   

  மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த இந்தக் குட்டிப்பையன் தன் வீட்டுக்கு வெளியே சைக்கிள் ஓட்டி விளையாடிக் கொண்டிருந்திருக்கிறான். நடுவில் தெரியாத்தனமாக பக்கத்து வீட்டுக்காரரின் கோழி வந்து சைக்கிளின் குறுக்கே விழுந்து விடுகிறது. பையனும் சந்தர்பவசமாக கோழியின் மீது சைக்கிளை ஏற்றி விட்டான். உடனடியாக நடந்தது என்ன தெரியுமா? பதறித் துடித்துக்கொண்டு இறங்கி கோழியைத் தூக்கிக் கொண்டு தான் சேர்த்து வைத்த அத்தனை பணத்தையும் எடுத்துக் கொண்டு குட்டிப்பையன் அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு ஓடியிருக்கிறான். எதற்கென்று நினைக்கிறீர்கள்? கோழிக்கு சிகிச்சை அளிக்கத்தான்.

  இதைக் கண்டு நெகிழ்ந்து போன சங்கா என்பவர் சிறுவனை அவன் கோழிக்கு சிகிச்சை அளிக்க கையில் பணத்துடன் நின்ற கோலத்தில் புகைப்படமெடுத்து விஷயத்தையும் விவரித்து முகநூலில் அச்சிறுவனை நெக்குருகிப் பாராட்டிப் பகிர்ந்திருக்கிறார். 

  சிறுவனை அவனது செயலுக்காக சங்கா மட்டுமே பாராட்டவில்லை. அவன் பயிலும் பள்ளியும் பாராட்டி சால்வை போர்த்தி பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கெளரவித்திருக்கிறது. மிஸோரம்மில் சால்வை போர்த்தி பாராட்டுப் பெறுவதென்பது மிகப்பெரிய கெளரவமாம்.  அங்கே சால்வை போர்த்தி பாராட்டுவதில் வெவ்வேறு ரகங்கள் உண்டாம். இச்சிறுவனுக்குப் போர்த்தப்பட்டுள்ளது தீரச்செயல் புரிந்தவர்கள் மற்றும் தைரியசாலிகளுக்கு வழங்கப்படும் கெளரவமாம்.

  ஹாட்ஸ் ஆஃப் டு யூ குட்டிப்பையா!

  சும்மாவா சொல்லிக் கொள்கிறார்கள்... குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று;

  அந்தப் குட்டிப்பையனின் மனசு சொக்கத் தங்கமே தான்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai