பிரபல பாப் பாடகி மரணம்.. கொலையா, தற்கொலையா? எனும் சந்தேகத்தில் காவல்துறை!

2016 ஆம் ஆண்டில் முதல்முறையாக சுல்லி தனது மேலாடையற்ற திறந்த மார்பகப் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவேற்றிய போது சமூக ஊடகத்தில் மிகக்கடுமையான விமர்சனத்திற்கும், கண்டனங்களுக்கும் உள்ளானார். 
பிரபல பாப் பாடகி மரணம்.. கொலையா, தற்கொலையா? எனும் சந்தேகத்தில் காவல்துறை!
Published on
Updated on
1 min read

நீங்கள் கொரியன் வெப் சீரிஸ்களின் ரசிகரா? அப்படியெனில் இந்தப் பெண்ணின் முகம் உங்களுக்கும் பரிச்சயமானதாக இருக்கலாம். கொரியாவின் பிரபல பாப் பாடகியும் நடிகையுமான சுல்லி தன் வீட்டில் இறந்து கிடந்ததை அவரது மேனேஜர் கண்டறிந்து காவல்துறைக்கு தெரியப்படுத்தி இருக்கிறார்.

இந்தப் பெண் சுல்லி பாடகி, நடிகை என்பதைக் காட்டிலும் வேறொரு விஷயத்திற்காக இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தொடர்ந்து பிரபலமாகிக் கொண்டிருந்தார். அது என்னவென்றால் இவரது நோ பிரா புரட்சி தான் அது. இந்தப் புரட்சியின் காரணமாக இவருக்கு இன்ஸ்டாவில் சுமார் 5 மில்லியன் ஃபாலோயர்கள் இருந்தார்கள். கொரியாவின் பேண்ட் எஃப் பாடகியான சுல்லி 2015 ஆம் ஆண்டில் அதிலிருந்து விலகிய பின்னர் நடிப்புத் துறையில் கால் பதித்தார். பாப் பேண்ட் பங்களிப்பை நிறுத்தியதற்கான முக்கிய காரணமாகக் கருதப்படுவது அங்கிருக்கையில் ஆன்லைனில் தான் உள்ளாக நேர்ந்த கடுமையான பாலியல் துஷ்பிரயோகப் போராட்டங்களை தொடர்ந்து எதிர்கொள்ள முடியாமல் போன காரணத்தால் மனம் வெறுத்துப் போய் தான் என்று கூறுகிறார்கள். சுல்லியின் இயற்பெயர் ஷோய் ஜின் ரி. இவர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டு இறந்த மற்றொரு கொரிய பாப் பாடகியான ஜாங்க்யூனின் நெருங்கிய தோழி என்பது குறிப்பிடத்தக்கது. 2017 ல் இறந்து விட்ட ஜாங்க்யூனின் நினைவுகள் சுல்லியை பெரிதும் வருத்திக் கொண்டிருந்ததாகத் தகவல்.

பாடகி, நடிகை என்பதைத் தாண்டி சுல்லி பெரும்பாலும் தனது சர்ச்சையான பேச்சு மற்றும் வாய்த்துடுக்கால் பெரிதும் பிரபலமாகியிருந்தார்.

சுல்லியின் ‘நோ பிரா’ புரட்சி நாட்களில் அவர் பலமுறை தனது மார்பகங்களை இன்ஸ்டா நேரலையில் காட்டத் தவறவில்லை. 2016 ஆம் ஆண்டில் முதல்முறையாக சுல்லி தனது மேலாடையற்ற திறந்த மார்பகப் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவேற்றிய போது சமூக ஊடகத்தில் மிகக்கடுமையான விமர்சனத்திற்கும், கண்டனங்களுக்கும் உள்ளானார். 

அதுமட்டுமல்ல, கடந்த மாதம் குடித்து விட்டு மேலாடை இல்லாமல் இன்ஸ்டாகிராம் நேரலையில் வந்து தர்ம தரிசனம் தந்த சுல்லியை குறித்து பழமைவாத நம்பிக்கை கொண்ட தென் கொரியாவில் மேலும் பல சர்ச்சைகளும், கண்டனங்களும் சுழன்றுகொண்டு தான் இருந்தன.

இந்நிலையில் 25 வயது சுல்லியின் இறப்பை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட கொரிய போலீஸார் கொலையா, தற்கொலையா? எனும் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com