'உடல் பருமன் கொண்டவர்களுக்கு கரோனா தாக்கும் அபாயம் அதிகம்'

உடல் பருமன் உடையவர்கள் கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகும் வாய்ப்பு அதிகம் என ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

உடல் பருமன் உடையவர்கள் கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகும் வாய்ப்பு அதிகம் என ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. 

கரோனா வைரஸ் தொற்று மற்றும் உடல் பருமன் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு குறித்து வடக்கு கரோலினா பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொண்டது. 

இந்த ஆய்வுகளின்படி, கரோனா வைரஸ் மற்றும் உடல் பருமன் இடையே  சிக்கலான தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களில் ​​உடல் பருமன் உள்ளவர்கள் (பி.எம்.ஐ 30 க்கும் மேற்பட்டவர்கள்) மருத்துவமனையில் அதிக ஆபத்தில் (113%) உள்ளனர். அதேபோன்று, உடல் பருமன் உள்ளவர்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டால், அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதற்கான வாய்ப்பு(74%), இறப்பதற்கான வாய்ப்பு (48%) உள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 

பேராசிரியர் பாரி பாப்கின் தலைமையிலான யு.என்.சி-சேப்பல் ஹில்ஸ் கில்லிங்ஸ் ஸ்கூல் ஆஃப் குளோபல் பப்ளிக் ஹெல்த் ஆராய்ச்சியாளர்கள், உலக வங்கியின் சுகாதார மற்றும் ஊட்டச்சத்து துறையின் பேராசிரியர் மீரா சேகர் ஆகியோர் அடங்கிய குழு இந்த ஆய்வினை மேற்கொண்டது. 

உடல் பருமனால் ஏற்படும் ஆபத்துகள், நோயெதிர்ப்பு மற்றும் உடலியல் மாற்றங்கள், உடல் பருமன் உள்ளவர்களுக்கு கரோனா வைரஸ் தாக்கும் அபாயம் ஆகியவை குறித்து ஆராயப்பட்டது. 

முன்னதாக, உயர் இரத்த அழுத்தம், இதயக் கோளாறு, நீரிழிவு நோய், நாள்பட்ட சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோய் ஆகியவை ஏற்கனவே கரோனா வைரஸ் ஆபத்துக்கான அடிப்படை காரணிகளாக உள்ளன. இவையனைத்துக்கும் உடல் பருமனும் காரணமாக உள்ளன. உடல் பருமன் உள்ளவர்களுக்கு சில தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவது கடினமாக இருக்கும். இதில் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் ஹெப்படைடிஸ்  போன்றவை அடங்கும். 

நோய்த்தொற்றின் போது, ​​சாதாரணமாக வைரஸ் உடலுக்குள் நுழையும் போது நோய் எதிர்ப்பு சக்தியை பொறுத்து அதன் பாதிப்பு இருக்கும். உடல் பருமன் இருக்கும்பட்சத்தில் இது இன்னும் சிக்கலாகும். உதாரணமாக, உடல் பருமன் உள்ள பெரியவர்களுக்கு இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று மற்றொரு ஆய்வு கூறுகின்றது. 

ஏறக்குறைய 40 சதவிகித அமெரிக்கர்கள் பருமனானவர்கள். இதனால்கூட அமெரிக்காவில் தொற்றுநோயின் தாக்கம் அதிகரித்திருக்கலாம். எதிர்காலத்தில் வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க உடல் எடையை சரியாக வைத்துக்கொள்வது அவசியம். 

ஆனால், தற்போதைய பொருளாதார சூழ்நிலையால், பெரும்பாலான ஏழை மற்றும் நடுத்தர மக்கள் ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்கின்றனர். இது எதிர்காலத்தில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தும். மலிவான, அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சர்க்கரை, சோடியம் மற்றும் நிறைவுற்ற கொழுப்பு மற்றும் அதிக சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. இவை அனைத்தும் அதிக எடை அதிகரிப்பது மட்டுமல்லாமல் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும். எனவே, கரோனா பேரிடர் காலத்தில் சத்தான உணவுகளை சாப்பிடுவது நோய் தாக்கத்தில் இருந்து நம்மை காக்க உதவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com