காற்றில் உள்ள மாசுக்கள் சருமத்தில் படிவதாலும், முகத்தில் அழுக்கு சேருவதாலும் முகப்பருக்கள் ஏற்படுகின்றன. இந்த முகப்பருக்களை விரட்ட எளிய வழி ஒன்று இருக்கிறது. இதற்காக நீங்கள் பெரிதாக செலவு செய்ய வேண்டியதும் இல்லை.
ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நீரை கொதிக்க வைத்து அதில் துளசி இலை, யூகலிப்டஸ், மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, வேப்பிலை இவற்றில் ஏதேனும் ஒன்றை போட்டு ஆவி பிடிப்பதே போதுமானது. ஆவி முழுவதும் முகத்தில் படும்படி, கனத்த துண்டு வைத்து மூடிக்கொண்டு, 3 முதல் 4 நிமிடங்கள் வரை ஆவி பிடிக்கவும். முகப்பரு உள்ளவர்கள் மேலும் சிறிது நேரம் பிடிக்கலாம். ஆவி பிடித்த பின்னர், சுத்தமான துணியில் ஐஸ்கட்டி வைத்து ஒத்தனம் கொடுக்கலாம் அல்லது குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிய பின்னர் துடைக்கலாம்.
ஆவி பிடிக்கும்போது முகத்தில் உள்ள துவாரங்கள் விரிந்து, அழுக்குகள் எளிதாக வெளியேறிவிடும். ஓரிரு நாட்களிலேயே முகப்பரு மறைந்து விடும். மேலும், சருமத்தை அழகாக, இளைமையுடன் வைத்துக்கொள்ள வாரத்திற்கு ஒருமுறை ஆவி பிடிப்பது சிறந்தது. இதனால் முகத்தில் ரத்த ஓட்டம் சீராக இருப்பதால் சருமம் எப்போதும் பொலிவுடன் இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தென்காசி சாந்தி பன்னோக்கு மருத்துவமனை ஆண்டு விழா

பணகுடி அருகே விபத்து: இரு பெண்கள் உயிரிழப்பு

அந்நியச் செலாவணி கையிருப்பு 70,700 கோடி டாலராக அதிகரிப்பு

தூத்துக்குடியில் விபத்து: முதியவா் உயிரிழப்பு
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



