தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நல்ல வேலை வேண்டுமா? ஃபேஸ்புக்கில் அழுத்தமான கருத்துகளை பதிவிட வேண்டாம்

ஒரு நல்ல வேலைக்காக விண்ணப்பித்து காத்திருப்பவர்களும், நல்ல வேலையைத் தேடிக் கொண்டிருப்பவர்களும் தங்களது ஃபேஸ்புக் பக்கத்தில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பான ஆழமான கருத்துகளை பதிவிட வேண்டாம் என்கிறது சமீபத

News image

பேஸ்புக்

Updated On :6 பிப்ரவரி 2020, 9:42 am

IANS


நியூ யார்க்: ஒரு நல்ல வேலைக்காக விண்ணப்பித்து காத்திருப்பவர்களும், நல்ல வேலையைத் தேடிக் கொண்டிருப்பவர்களும் தங்களது ஃபேஸ்புக் பக்கத்தில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பான ஆழமான கருத்துகளை பதிவிட வேண்டாம் என்கிறது சமீபத்திய ஒரு ஆய்வு.

இன்டர்நேஷனல் ஜார்னலில் வெளியிடப்பட்ட தேர்வு மற்றும் மதிப்பீடு தொடர்பான ஆய்வறிக்கையில், ஃபேஸ்புக்கில் தங்களது அழுத்தம் திருத்தமான கருத்துகளை பதிவிடும் நபர்களை, சமூக வலைத்தளங்களில் தீயாக வேலை செய்யும் குமார்களை பல்வேறு நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தில் பணியமர்த்த யோசிக்கின்றனவாம்.

2018ம் ஆண்டில் சுமார் 70 சதவீத நிறுவனங்கள், வேலை கேட்டு விண்ணப்பித்திருந்தவர்களின் ஃபேஸ்புக் பக்கம் மூலமாக அவர்களது பணித்திறனை ஆய்வு செய்ததாகவும், அதே சமயம், 60 சதவீதம் நிறுவனங்கள், சமூக வலைத்தளங்களில் பதிவிடும் எதிர்மறையான கருத்துகளால், விண்ணப்பங்களை நிராகரித்திருப்பதும் தெரிய வந்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

எனவே, எனது கருத்து, எனது ஃபேஸ்புக் பக்கம் என நாம் நினைத்ததை எல்லாம் சொல்லலாம் என்று இனியும் நினைத்தால் அது உங்களுக்கே பிரச்னையாகிவிடும். நீங்கள் பதிவிடும் கருத்துகளை உங்கள் நண்பர்கள் மட்டுமே பார்க்கிறார்கள் என்று நினைக்காமல், இனி இதுபோன்ற நிறுவனங்களும் பார்க்கலாம் என்பதை நினைவில் கொண்டு செயல்படுங்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.