சிறந்த மனநிலைக்கு உதவும் 7 வாழ்வியல் மாற்றங்கள்

சிறந்த உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நல்ல உணவு மற்றும் வாழ்க்கை முறை அவசியம். வாழ்வியல் முறைகள்தான் நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை தீர்மானிக்கின்றன.
கோப்புப்படம்
கோப்புப்படம்


சிறந்த உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நல்ல உணவு மற்றும் வாழ்க்கை முறை அவசியம். வாழ்வியல் முறைகள்தான் நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை தீர்மானிக்கின்றன. உங்களின் சிறுசிறு அன்றாட நிகழ்வுகள் கூட உங்களின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்துடன் தொடர்புடையவை. 

ஆனால், நம் எளிமையான வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் உங்கள் மனநிலையை உயர்த்துவதோடு உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். அந்தவகையில் உணவு மாற்றங்கள் அவசியம்.

உணவுக் கட்டுப்பாடு

உடலியல் இயக்கங்களை சிதைக்கக்கூடிய உணவுகளைத் தவிர்க்க வேண்டும். மனத்திற்கும், உடலுக்கும் ஆரோக்கியமான உணவுகளை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். சத்தான உணவுகள் நம் உடலுடன் நேர்மறை சிந்தனையை ஏற்படுத்தி மனநிலையையும் மேம்படுத்துகிறது.

உடற்பயிற்சி

நாள்தோறும் ஒரு அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இது நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய் போன்ற ஆபத்துகளிலிருந்து நம்மை காக்கிறது. 

குறிப்பாக நாம் கவலைப்படும் சில விஷயங்களில் முக்கியமானது உடல் எடை அதிகரிப்பு. அவ்வாறு உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். உடலளவிலும், மனதளவிலும் நல்ல மாற்றத்தை உணருவீர்கள். உடற்பயிச்சி மூளை செயல்பாடுகளிலும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதால் நினைவுத்திறன் அதிகரிக்கும்.

ஒமேகா 3 அமிலம் கொண்ட உணவுகள் 

உடல்நலத்திற்கென்று இருப்பது போல மனநலத்திற்கான உணவுகள் என்று இருக்கின்றன. வைட்டமின் டி, ஃபோலிக் அமிலம் மற்றும் அத்தியாவசிய ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் ,மனநலத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன. திசுக்களில் ஒமேகா -3 அளவுகள் குறைந்தால் மனச்சோர்வு மற்றும் மனநிலை கோளாறுகள் ஏற்படும் என்று ஆய்வு கூறுகிறது. எனவே, பால், முட்டை, மீன், நட்ஸ் வகைகள் உள்ளிட்ட ஒமேகா 3 அமிலங்கள் கொண்ட உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளுங்கள். 

மனநல சிகிச்சை

மனரீதியாக பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது மன அழுத்தத்தில் இருந்தாலோ தயங்காமல் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். மருத்துவரிடம் செல்லாவிட்டாலும் உங்கள் நண்பர்களிடம் மனம் விட்டுபேசுங்கள். மனநிலை நன்றாக இருந்தால் மட்டுமே உடல்நிலை சரியாக இருக்கும். 

மது, புகை 

மது அருந்துவதை குறையுங்கள்; புகைப் பிடிப்பதை முற்றிலும் விட்டுவிடுங்கள். இந்த ஆரோக்கியமற்ற பழக்கங்கள் உங்கள் மன ஆரோக்கியத்தை மோசமாக்குவதில் உடலில்மோசமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. 

பிடித்ததைச் செய்யுங்கள்

இயந்திர வாழ்க்கையில் சுழலும் நாம் நமக்கான நேரத்தை ஒதுக்கிக்கொள்ள வேண்டும். உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்து மகிழ்ச்சி காணுங்கள். உதாரணமாக நண்பர்களுடன் வெளியில் செல்வது, பிடித்த நடிகர்களின் படங்களுக்குச் செல்வது என உங்களுக்கான நேரத்தை செலவிட மறந்துவிட வேண்டாம். 

குறிக்கோளை அடைய முற்படுங்கள் 

கண்டிப்பாக ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் ஒரு குறிக்கோள் இருக்கும். அதை நோக்கியே நாம் பயணிக்கிறோம். அது சிறிதாக இருந்தாலும் சரி, பெரிய குறிக்கோளாக இருந்தாலும் சரி. எனவே, உங்கள் மனதை திருப்தி படுத்த வேண்டுமென்றால் உங்கள் குறிக்கோளை அடைவதே சரியாக இருக்கும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com