இருமல், சளியைப் போக்கும் ஆரோக்கிய பானம்!

குளிர்காலத்தில் இருமல், சளி, தொண்டைப் பிரச்னை ஆகியவை ஏற்படுவது சாதாரணம். இவற்றை வீட்டில் உள்ள பொருள்களை பயன்படுத்தி எளிதாக சரிசெய்ய முடியும். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

குளிர்காலத்தில் இருமல், சளி, தொண்டைப் பிரச்னை ஆகியவை ஏற்படுவது சாதாரணம். இவற்றை வீட்டில் உள்ள பொருள்களை பயன்படுத்தி எளிதாக சரிசெய்ய முடியும். 

தேவையான பொருள்கள்: 

இஞ்சிச்சாறு - ஒரு டேபிள் ஸ்பூம்

தேன் - ஒரு டீஸ்பூன்

மிளகுத்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்

எலுமிச்சை - 1/2 எலுமிச்சை 

ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்கவைத்து அத்துடன் இஞ்சிச் சாறு, தேன், மிளகுத்தூள், எலுமிச்சை சாறு ஆகியவற்றைக் கலந்து லேசாக கொதிக்க வைக்கவும். பின்னர் இவற்றை வடிகட்டி குடிக்கவும். 

காய்ச்சல், சளி மற்றும் இருமல் போன்ற உடல்நலப் பிரச்னைகளுக்கு இது சிறந்த தீர்வாக இருக்கும். 

வைரஸ் தொற்றுகளிலிருந்து நிவாரணம் அளிப்பதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கும், செரிமான அமைப்பை வலுப்படுத்துவதற்கும் இந்த பானம் உதவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com