ஆரோக்கியமான, பொலிவான சருமத்திற்கு என்ன சாப்பிட வேண்டும்?

சரும அழகுக்கும் சாப்பிடும் உணவுகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஆரோக்கியமான சத்துமிக்க உணவுகளை சாப்பிடும்போது சரும அழகைக் கூட்டுகிறது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

சரும அழகுக்கும் சாப்பிடும் உணவுகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஆரோக்கியமான சத்துமிக்க உணவுகளை சாப்பிடும்போது சரும அழகைக் கூட்டுகிறது. 

சரும அழகுக்காக விலையுயர்ந்த செயற்கைத் தயாரிப்புகளை பயன்படுத்துவதைத் தவிர்த்து உணவுகளில் கவனம் செலுத்துங்கள். 
என்ன சாப்பிட வேண்டும்? 

காய்கறிகள், பழங்கள்

ஆரோக்கியமான பொலிவான சருமத்திற்கு தினமும் குறைந்தது ஐந்து பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள். 

சூரிய ஒளி, சுற்றுச்சூழல் மாசு உள்ளிட்ட காரணங்களால் சரும சுருக்கங்கள் ஏற்படும். எனவே, அவற்றில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அடங்கிய பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சாப்பிடுங்கள்.

இனிப்பு உருளைக்கிழங்கு, பூசணி மற்றும் கேரட்டில் காணப்படும் பீட்டா கரோட்டின், பப்பாளி, கீரை ஆகியவற்றில் காணப்படும் லுடீன் ஆகியவை ஆரோக்கியமான சருமத்திற்கு உதவும். 

குறைந்த கார்போஹைட்ரேட்

கிளைசெமிக் இன்டெக்ஸ் என்பது கார்போஹைட்ரேட் அடிப்படையிலான உணவுகளை எவ்வளவு வேகத்தில் உடலில் குளுக்கோஸாக உடைக்கிறது என்பதை வரிசைப்படுத்தும் ஒரு அமைப்பாகும். எனவே, அரிசி, மாவு சார்ந்த உணவுகளைத் தவிர்த்து பீன்ஸ், பருப்பு வகைகள் ஆகிய குறைந்த கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளைச் சாப்பிடலாம். 

போதுமான வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ 

வைட்டமின் சி ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. நோய் எதிர்ப்பு சக்தியை ஆதரிக்கிறது. பிரகாசமான சருமத்தைத் தருகிறது. உடலில் உள்ள கொலாஜனை உற்பத்தி செய்ய வைட்டமின் சி தேவைப்படுகிறது. இது நுண்குழாய்களை வலுப்படுத்த உதவுகிறது.

வைட்டமின் ஈ உயிரணு சேதத்திலிருந்து பாதுகாக்கிறது, தோல் வளர்ச்சியை ஆதரிக்கிறது. வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ அதிகம் உள்ள உணவுகள் ஆரஞ்சு, பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி, புளுபெர்ரி, ப்ரோக்கோலி, கொய்யா, பாதாம், வெண்ணெய், நல்லெண்ணெய், சூரியகாந்தி, பீட்ரூட். 

நிறைய துத்தநாகம் 

உடலில் உள்ள துத்தநாகம் சருமத்தில் உள்ள செபாசியஸ் சுரப்பிகளின் இயல்பான செயல்பாட்டிற்கு உதவும். சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் வைத்து தோல் சேதத்தை சரிசெய்யும். துத்தநாகம் நிறைந்த உணவுகளில் முழு தானியங்கள், விதைகள் மற்றும் நட்ஸ் குறிப்பிடத்தக்கவை. 

நீரேற்றம் 

உடலில் ஏற்படும் நீரிழப்பு உங்கள் சருமத்தை வறண்டதாகவும், சோர்வாகவும் மாற்றுகிறது. இதனால் சருமம் சாம்பல் நிறத்தில் மாறுகிறது. சருமம் ஆரோக்கியமாகவும் நெகிழ்வாகவும் இருக்க ஈரப்பதம் தேவை. எனவே, நீங்கள் ஒரு நாளைக்கு குறைந்தது ஆறு முதல் எட்டு தம்ளர் அல்லது 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்க பழச்சாறுகளையும் அருந்தலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com