இதயத்தைப் பாதுகாக்கும் 5 உணவுகள்!

இன்று உலக இதய நாளையொட்டி, இதயத்தைப் பாதுகாக்கும் 5 உணவுகளைத் தெரிந்துகொள்ளலாம். 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
2 min read

கரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தினால் இன்று பலரது உணவுமுறைகளிலும் சிறு மாற்றமேனும் நிகழ்ந்துள்ளது. உயிர்ப்பலி மட்டுமின்றி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தாலும், கரோனா வைரஸ் தொற்று, சுகாதாரம் மற்றும் உணவுப்பழக்கவழக்கம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. 

இதனால் கரோனாவுக்கு மத்தியில் மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நோக்கி மாறிக் கொண்டுள்ளனர். சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வதும், உடற்பயிற்சி மேற்கொள்வதும் சற்று அதிகரித்துள்ளது. உடல்நலன் குறித்து மக்கள் அதிகம் அக்கறை கொண்டு வருகின்றனர். 

ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் 29 அன்று உலக இதய தினம் கொண்டாடப்படுகிறது. இதய பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இதயத்தைப் பாதுகாக்கவும் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் இந்நாள் கொண்டாடப்படுகிறது. 

உலக இதய நாளன்று நீங்கள் குறைந்தபட்சம் செய்யக்கூடிய ஒரு விஷயம் என்னவென்றால், உங்கள் உணவில் சேர்க்கும் கொழுப்பு(கொலஸ்ட்ரால்) அளவை கண்காணிக்க வேண்டும். மேலும், பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது சலிப்பாக இருந்தாலும், உங்கள் இதயத்திற்கு நல்லது என்பதால் அதனைத் தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். 

உங்கள் இதயத்திற்கு ஆரோக்கியமான ஐந்து உணவுகள்:

பார்லி

தானியங்களில் ஒருவகையான பார்லி, கொழுப்பைக் கட்டுப்படுத்தவும், கொழுப்பு படிவதைத் தடுக்கவும் உதவுகிறது. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும் எளிதில் கரையக்கூடியது. கல்லீரலில் கொலஸ்ட்ரால் உற்பத்தியைக் குறைக்கிறது. உடலில் கொழுப்புகளின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்கிறது.

பெர்ரி

பெர்ரி பழங்கள் நிறைய பேருக்கு விருப்பமான ஒன்று. ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி, ப்ளூபெர்ரி மற்றும் ப்ளாக்பெர்ரி. இந்த சிறிய பெர்ரிக தான் இதயத்தின் ஆரோக்கியத்தில்பெரும் பங்கு வகிக்கின்றன. முக்கியமான ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்து காணப்படுகின்றன. அதுபோல பெர்ரிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இது இதயத்தில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் வீக்கம் ஏற்படாமல் பாதுகாக்கிறது. 

நட்ஸ்

நார்ச்சத்து, புரதம் மற்றும் சில கொழுப்புகள் நிறைந்த நட்ஸ் வகைகள் அனைத்தும் உடலுக்கு பல்வேறு வகைகளில் நன்மை செய்கின்றன. பாதம், பிஸ்தா, வால்நட் உள்ளிட்டவை இதயத்திற்கு பலம் சேர்ப்பவை. பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்கள், குப்பை உணவுகளுக்குப் பதிலாக நட்ஸ் வகைகளை சாப்பிடுங்கள். 

மீன்

சால்மன், டுனா மற்றும் ட்ரௌட் போன்ற கொழுப்புள்ள மீன்களை உட்கொள்வது இதயத்தை பாதுகாக்கும். ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களைக் கொண்ட மீன்கள் இதயத்தில் வீக்கத்தைத் தடுக்க உதவுகின்றன. மீன் சாப்பிட விரும்பாதவர்கள், தாவரங்களிலிருந்தும் ஒமேகா -3 கொழுப்புகளைப் பெறலாம். ஆளி விதைகள், ஒமேகா -3 கொழுப்பு நிறைந்த உணவாகும். 

ஓட்ஸ்

காலை உணவாக ஒன்றரை கப் ஓட்ஸ் கஞ்சி சாப்பிடுவது இதயத்தை நன்றாக செயல்பட வைக்கும். பீட்டா-குளுக்கன் அளவு சரியாக இருக்கும் பட்சத்தில் இதய நோய்கள் வராது. ஓட்ஸில் கொழுப்பைக் குறைக்கும் ஒரு குறிப்பிட்ட நார்ச்சத்து இருப்பதால் காலை உணவாக எடுத்துக்கொண்டால் உடலில் உள்ள கொழுப்புகள் குறையும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com