முட்டை சாப்பிடுவது இதயத்திற்கு ஆபத்தா?

முட்டை ஒரு முக்கியமான புரத உணவு. ஒரு முட்டையில் 75 கலோரி இருக்கிறது. 7 கிராம் புரோட்டீன், 5 கிராம் கொழுப்பு, 1.6 கிராம் இரும்பு, வைட்டமின், தாதுக்கள், கரோட்டினாய்டுகள் ஆகியவை உள்ளன. 
முட்டை சாப்பிடுவது இதயத்திற்கு ஆபத்தா?
Published on
Updated on
1 min read

முட்டை ஒரு முக்கியமான புரத உணவு. தினமும் முட்டை சாப்பிடலாம் என்று ஒரு தரப்பு கூற, அதிகம் சாப்பிடுவது ஆபத்து என்கிறது மற்றொரு தரப்பு. 

ஒரு முட்டையில் 75 கலோரி இருக்கிறது. 7 கிராம் புரோட்டீன், 5 கிராம் கொழுப்பு, 1.6 கிராம் இரும்பு, வைட்டமின், தாதுக்கள், கரோட்டினாய்டுகள் ஆகியவை உள்ளன. 

முட்டை சாப்பிடுவது நல்லதா? கெட்டதா? என ஆராய்ச்சிகள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. 

இந்நிலையில், தினமும் முட்டை சாப்பிடுவது இதயத்திற்கு நல்லதா என்பது குறித்து சீன ஆய்வாளர்கள் ஓர் ஆய்வு மேற்கொண்டனர். 

அதில், தினமும் அளவாக, அதாவது ஒரு முட்டை எடுத்துக்கொள்பவர்களுக்கு இதய நோய் அபாயம் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. 

'இ-லைப்' என்ற இதழில் இதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 

கொழுப்பு மட்டுமின்றி முட்டையில் பல்வேறு சத்துகள் இருப்பதால் அதனை தவிர்த்துவிட முடியாது. மேலும் உடலுக்குத் தேவையான புரோட்டீன் எளிதாகக் கிடைக்கும் ஒரு உணவுப்பொருள் முட்டை என்கின்றனர் ஆய்வாளர்கள். 

'ஹார்ட்' இதழில் வெளியிடப்பட்ட 2018 ஆம் ஆண்டு ஆய்வில், சீனாவில் சுமார் 5 லட்சம் பெரியவர்களிடம் நடத்திய ஆய்வில், அடிக்கடி முட்டைகளை அடிக்கடி சாப்பிடுபவர்களைவிட, தினமும் சராசரியாக, ஒரு நாளைக்கு ஒரு முட்டை சாப்பிடுபவர்களுக்கு இதய நோய், பக்கவாதம் ஏற்படும் அபாயம் கணிசமாகக் குறைவாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 

இதை அடிப்படையாக வைத்து, முட்டை சாப்பிட்டால் ரத்தத்தில் குறிப்பாக இதய செல்களில் எந்த அளவுக்கு மாற்றம் ஏற்படுகிறது என அடுத்தகட்ட ஆய்வைத் தான் இப்போது அவர்கள் செய்துளளனர். 

இதயச் செயல்பாட்டுக்கும் முட்டை சாப்பிடுவதற்கும் உள்ள தொடர்பாக பிளாஸ்மா கொலஸ்ட்ரால் வளர்சிதை மாற்றத்தைக்  கண்டறிந்துள்ளதாக ஆய்வாளர் லாங் பான் தெரிவித்தார். 

இந்த ஆய்வில் கலந்துகொண்ட 4,778 பேரில் 1,377 பேருக்கு இதயக் கோளாறுகள் இல்லை. இதில் 225 பேரின் ரத்த பிளாஸ்மா மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளது. அதில், 24 பேர் முட்டை சாப்பிடுபவர்களாக இருந்துள்ளனர். 

மேலும்,  இதய நோய்கள் உள்ளவர்கள் 14 பேரின் வளர்சிதை மாற்றத்தை கண்காணிக்கும்போது அவர்கள் உணவில் குறைவாகவே முட்டை எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

தினமும் சராசரியாக முட்டை எடுத்துக் கொண்டவர்களுக்கு இதய நோய் பாதிப்பு குறைந்துள்ளது இந்த ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஒருவேளை டயட்டில் இருப்பவர்கள், கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பவர்கள் வேண்டுமானால் மஞ்சள் கருவை சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com