பொருந்தா உணவுகளைச் சாப்பிடுவதால் தூக்கம் பாதிக்கப்படுமா?

'ஜங்க்' புட் எனும் பொருந்தா உணவுகள் தூக்கத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்து சுவீடன் ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய ஆய்வு மேற்கொண்டுள்ள அதில் சில முக்கிய முடிவுகளும் தெரிய வந்துள்ளன. 
பொருந்தா உணவுகளைச் சாப்பிடுவதால் தூக்கம் பாதிக்கப்படுமா?

'ஜங்க்' புட் எனும் பொருந்தா உணவுகள் தூக்கத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்து சுவீடன் ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய ஆய்வு மேற்கொண்டுள்ள அதில் சில முக்கிய முடிவுகளும் தெரிய வந்துள்ளன. 

நவீன உலகத்தில் இன்று உணவு பழக்கவழக்க முறைகள் பெரிதும் மாறிவிட்டன. சத்தான உணவுகளைத் தவிர்த்து ருசிக்காக தேவையற்ற உடலுக்கு பிரச்னை ஏற்படுத்தக்கூடிய உணவுகளையே அதிகம் சாப்பிடுவது வழக்கமாகிவிட்டது. குழந்தைகளுக்கும் அவ்வாறு வெளியில் உணவுகளை வாங்கிக்கொடுப்பதால் அந்த ருசிக்கு அடிமையாகி துரித, பொருந்தா உணவுகளை அதிகம் எடுத்துகொள்கின்றனர். 

இதனால் உடல் பருமன், நீரிழிவு நோய், உடல் உறுப்புகளில் கோளாறு என பல நோய்கள் ஏற்படுகின்றன. 

இந்நிலையில்தான் இந்த பொருந்தா உணவுகள் தூக்கத்தை பாதிக்கிறதா, எந்த அளவுக்கு பாதிக்கிறது என்பது குறித்து சுவீடன் உப்சாலா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். 

'ஒபேசிட்டி' என்ற இதழில் இதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

நல்ல ஆரோக்கியமான நபர்கள் இரு பிரிவுகளாக பிரிந்து ஒரு தரப்பினர் ஆரோக்கியமான உணவுகளையும் மற்றொரு தரப்பினர் பொருந்தா உணவுகளையும் சாப்பிட்டனர். அப்போது அவர்களின் தூக்கமும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. 

இதில், பொருந்தா உணவுகள், ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிட்டவர்களுக்கு தூக்கம் குறைந்தது கண்டறியப்பட்டுள்ளது. மோசமான உணவினால் மோசமான தூக்கமே ஏற்படும் என்றும் மோசமான உணவு, தூக்கத்தினால் உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படலாம் என்று ஆய்வாளர்கள் இதன் மூலமாக எச்சரிக்கை விடுகின்றனர். 

தூக்கம் என்பது மூளையின் செயல்பாடுகளுடன் நேரடி தொடர்புடையது. அந்தவகையில் தூக்கமின்மை மூளையின் செல்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறுகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com