இன்சுலினின் செயல்திறனை அதிகரிப்பது எப்படி?

இன்சுலின் செயல்திறனை எப்படி அதிகரிக்கலாம் என்பதை கீழே கூறப்பட்டுள்ளதை முயற்சிக்கலாம்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இன்சுலின் செயல்திறனை எப்படி அதிகரிக்கலாம் என்பதை கீழே கூறப்பட்டுள்ளதை முயற்சிக்கலாம்.

1. அதிகமாக தூங்குங்கள்

தூக்கமின்மையும், குறைவான இன்சுலின் செயல்திறனும் ஒன்றுக்கொண்று தொடர்புள்ளதாக உள்ளது.

எடுத்துக்காட்டாக, 9 ஆரோக்கியமான தன்னார்வலர்களை உள்ளடக்கிய ஒரு ஆய்வில், இரவில்  8 1/2 மணிநேர தூங்கியவர்களுடன் ஒப்பிடும்போது, வெறும் 4 மணிநேர தூங்கியவர்களின் இன்சுலின் செயல்திறன் மற்றும் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் திறன் குறைவாக உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2. அதிகமாக உடற்பயிற்சி செய்யுங்கள்

வழக்கமான உடற்பயிற்சி இன்சுலின் செயல்திறனை அதிகரிக்க சிறந்த வழிகளில் ஒன்றாகும்.

உடற்பயிற்சி செய்வதால் ரத்த சர்க்கரையை தசைகளுக்குள் சேமித்து வைக்க உதவுகிறது மற்றும் இன்சுலின் செயல்திறனை உடனடியாக அதிகரிக்க உதவுகிறது.

உடற்பயிற்சி செய்வதால் நீரிழிவு நோய் உள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் இன்சுலின் செயல்திறன் அதிகரித்துள்ளதாக பல ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

3. எடையை குறையுங்கள்

அதிக உடல் எடை மற்றும் தொப்பைப் பகுதியில் உள்ள கொழுப்பு டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிப்பதாக உள்ளது. 

அதிக அளவு தொப்பை கொழுப்புக்கும், குறைந்த இன்சுலின் செயல்திறனுக்கும் ஒன்றுக்கொண்று தொடர்புள்ளதாகவுள்ளது.  எடையை குறைப்பது மற்றும் தொப்பையில் உள்ள கொழுப்பை குறைப்பதால் இன்சுலின் செயல்திறன் அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

4.கரையக்கூடிய நார்ச்சத்து  உணவை அதிகம் சாப்பிடுங்கள்

நார்ச்சத்தை இரண்டு  பிரிவுகளாகப் பிரிக்கலாம். கரையக்கூடியது மற்றும் கரையாதது.

பல ஆய்வுகள் அதிக கரையக்கூடிய நார்ச்சத்து உட்கொள்ளல் மற்றும் அதிக இன்சுலின் செயல்திறன் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பைக் கண்டறிந்துள்ளன.

கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்த உணவுகளில் பருப்பு வகைகள், ஓட்ஸ், ஆளிவிதைகள் ஆரஞ்சு போன்றவைகள் அடங்கும்.

5.கார்போஹைட்ரேட் உணவை குறைக்கவும்

ரத்தத்தில் இன்சுலின் அளவை  கார்போஹைட்ரேட் உள்ள உணவுகள் உயர்த்துகின்றன. குறைவான கார்போஹைட்ரேட் உணவுகளை உட்கொள்வது நல்லது.

குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் (ஜிஐ) கார்போஹைட்ரேட்டுகள் சிறந்தவையாகும். ஏனெனில் அவை ரத்த சர்க்கரையின் வெளியீட்டை மெதுவாக்குகின்றன.

குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் (ஜிஐ) உணவை தேர்ந்தெடுப்பது இன்சுலின் செயல்திறனை அதிகரிக்க சிறந்த வழியாகும்.

6.  நறுமணப் பொருட்கள் மற்றும் மூலிகைகளை சேர்த்துக் கொள்ளுங்கள்

வெந்தயம், மஞ்சள், இஞ்சி மற்றும் பூண்டு உள்ளிட்ட மூலிகைகள் மற்றும் நறுமணப் பொருட்கள் இன்சுலின் செயல்திறனை அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

மேலும், இலவங்கப்பட்டையில் ரத்த சர்க்கரையை குறைக்கும் மற்றும் இன்சுலின் செயல்திறனை அதிகரிக்கும் திறன் உள்ளதாக அறியப்படுகிறது.

7. க்ரீன் டீ அதிகம் குடிக்கவும்

டைப் 2 நீரிழிவு நோயாளிகள் க்ரீன் டீ குடிப்பது ஒரு சிறந்த தேர்வாகும். பல ஆய்வுகள் கிரீன் டீ குடிப்பதால் இன்சுலின் செயல்திறனை அதிகரிக்கலாம் மற்றும் ரத்த சர்க்கரையை குறைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்சுலின் செயல்திறனை திறனை அதிகரிக்கவும், நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கவும் மேற்கண்டவற்றை மருத்துவரின் ஆலோசனையை கொண்டு முயற்சிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com