கரோனாவுக்குப் பின் 18-24 வயதுடையவர்களின் மனநலம் மிகவும் பாதிப்பு!

கரோனா தொற்றுநோய் காலத்திற்குப் பிறகு 18 முதல் 24 வயதுக்குள்பட்டவர்களின் மனநலம் மிகவும் மோசமடைந்துள்ளதாக சமீபத்திய ஆய்வு கூறுகிறது.
கரோனாவுக்குப் பின் 18-24 வயதுடையவர்களின் மனநலம் மிகவும் பாதிப்பு!
Published on
Updated on
1 min read

கரோனா தொற்றுநோய் காலத்திற்குப் பிறகு 18 முதல் 24 வயதுக்குள்பட்டவர்களின் மனநலம் மிகவும் மோசமடைந்துள்ளதாக சமீபத்திய ஆய்வு கூறுகிறது.

இந்தியாவில் உள்ள க்ரியா பல்கலைக்கழகத்தில் உள்ள செப்பியன் லேப்ஸ் சென்டர் (Sapien Labs Centre) கரோனாவுக்குப் பின் இளைஞர்களின் மனநலன் குறித்து ஆய்வு மேற்கொண்டது. 

2020 ஏப்ரல் முதல் 2023 ஆகஸ்ட் வரை 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 1,06,427 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் சில முக்கிய முடிவுகள் தெரிய வந்துள்ளன. 

'18-74 வயதுடையவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டாலும் 18-24 வயதுடையவர்களின் மன நலன் மிகவும் மோசமடைந்துள்ளது. அவர்களின் சமூக கலந்துரையாடல் குறைந்துள்ளது, வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது, இணையம் மற்றும் சமூக வலைத்தளங்களில் பயன்பாடு அதிகரித்துள்ளது. 

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் வடமாநிலங்களைவிட தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் 18-24 வயது இளைஞர்களின் மனநலம் மேம்பட்டுக் காணப்பட்டது. 

இந்தியாவில் 20 கோடிக்கும் அதிகமாக இளைஞர்கள் உள்ள நிலையில் அவர்கள் நன்கு படித்து ஆங்கிலம் தெரிந்து இணைய வசதியுள்ள சூழலில்கூட வேலைவாய்ப்புக்கான சவால்களை எதிர்கொள்கின்றனர். கல்வி அழுத்தம், பொருளாதாரம் என விவாதங்கள் இருந்தபோதிலும், இதற்கான காரணத்தை அறிய வேண்டியது அவசியம்.

குறிப்பாக ஸ்மார்ட்போன்களினாலும் சமூக ஊடகத்தின் அதிக பயன்பாட்டினாலும் இளைஞர்களிடையே இந்த மன அழுத்தம் ஏற்பட்டிருக்கலாம். எனவே மனநலம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com