நெகடிவ் செய்திகளை அதிகம் கேட்டால் மூளை பாதிக்குமா?

நாள்தோறும் தொடர்ந்து எதிர்மறையான செய்திகளை அதிகம் கேட்டுக்கொண்டே இருப்பது, மூளையை பாதிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நெகடிவ் செய்திகளை அதிகம் கேட்டால் மூளை பாதிக்குமா?


நாள்தோறும் தொடர்ந்து எதிர்மறையான செய்திகளை அதிகம் கேட்டுக்கொண்டே இருப்பது, மூளையை பாதிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தினந்தோறும் நாம் தெரிந்தும் தெரியாமலும் செய்யும் சில பல வேலைகள் மூளைய நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கிறது என்கிறது ஆய்வுகள்.

நமது மூளை, உடலின் அனைத்து உறுப்புகளின் இயக்கத்துக்கும் அடிப்படை காரணியாக உள்ளது. அது மட்டுமா? நமது எண்ணங்கள், சிந்தனை, உணர்ச்சி, தொடு உணர்வு, நடப்பது, பார்வை, மூச்சு வீடுதல், உடலின் வெப்பநிலையை சமநிலையில் வைப்பது, பசி உணர்வை தூண்டுவது என நாம் நாமாக இருக்க பல்வேறு பணிகளை அயராது செய்து கொண்டேயிருக்கிறது.

ஆனால் நாமோ சுண்டைக்காய் விஷயங்களை செய்து அந்த மூளையை பாதிக்கச் செய்கிறோம். அதுபோன்று மூளையை பாதிக்கும் விஷயங்கள் எண்ணற்றவை.

சமூகத்திலிருந்து தனித்திருத்தல்
ஏற்கனவே கரோனா காலத்தில் தனிமைப்படுத்திக்கொள்ளுதல் என்ற வார்த்தை அறிமுகமாகியிருந்தது. ஆனால், அது சமூகத்துக்கு நல்லது. ஆனால், சமூகத்திலிருந்து நாம் தனித்தருத்தல் நமக்கு நல்லதல்ல. எப்போதும் மனிதன் குழுவாக வாழும் வகையறா. எனவே, நல்லதோ, கெட்டதோ சமூகத்துடன் ஒன்றிணைந்து வாழ வேண்டும். தனித்திருத்தல், மூளையை சோர்வடையச் செய்யும். எதிலும் ஆர்வம் ஏற்படாமல் ஆகிவிடக்கூடும்.

ராதிகா சொன்னதுதான்..
லவ் டுடே படத்தில் ராதிகா சொல்வதைப் போலத்தான்.. எப்போது பார்த்தாலும் ஃபோனை பார்த்துக்கொண்டே இருப்பதும் முளையை பாதிக்கும். அது எப்படி பாதிக்கும்? என்றால், மூளையின் கடிகாரம் தனது இயக்கத்தில் குளறுபடியை சந்திக்கும். இதனால், நாளமில்லா சுரப்பிகளில் சமச்சீரற்ற தன்மை, மூளைக் கொதிப்பு போன்றவை ஏற்படும்.

எப்போதும் இருட்டில் இருப்பது
மூளையின் சமநிலைக்கு மெலடனின் என்ற சுரப்பி காரணமாகிறது. இது இருட்டில் இருக்கும்போது சுரந்து, நமது இயக்கத்தை மந்தப்படுத்தி, உறக்க நிலைக்குக் கொண்டு செல்லும். எனவே, அதிகமாக இருட்டில் இருப்பது, மெலடனின் சுரப்பியை அதிகமாக சுரக்கச் செய்யும்.

எதிர்மறை செய்திகள்
தொடர்ந்து அதிகப்படியான எதிர்மறை செய்திகளை கேட்டுக்கொண்டே இருப்பது மூளையில் அழுத்தத்தை ஏற்படுத்தும் சுரப்பிகளை அதிகம் சுரக்கச் செய்யும். இதனால், மன அழுத்தம் ஏற்படலாம். தன்னம்பிக்கை இழப்பு போன்ற சிந்தனைகள் உருவகலாம் என கூறப்படுகிறது.

உடல் இயக்கம்
குறைவான உடல் இயக்கம், மூளைக்கு ரத்தம் செல்வதைக் குறைக்கிறது. இதனால், மூளைக்கு குறைவான ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு, மூளையின் செல்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பதும் மூளைக்கு அவசியம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com