உங்கள் ரத்த வகை என்ன? என்னென்ன நோயால் பாதிக்கப்படலாம்?

உங்களுடைய ரத்த வகையைப் பொருத்து நீங்கள் எந்தெந்த நோயால் பாதிக்கப்படலாம் என தெரிந்துகொள்ளலாம்.
blood group
ENS
Published on
Updated on
1 min read

உங்களுடைய ரத்த வகையைப் பொருத்து நீங்கள் எந்தெந்த நோயால் பாதிக்கப்படலாம் என்று கூறினால் நம்ப முடிகிறதா?

ஆம், ரத்த வகையைக் கொண்டு நோய்கள் குறித்த முன்கணிப்பை தெரிந்துகொள்ளலாம் என்கிறது ஆய்வின் முடிவுகள். ஒரு ஆய்வு அல்ல, இதுவரை மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகள் இதனை உறுதிப்படுத்துகின்றன.

ரத்த வகையைக் கொண்டு எந்தெந்த நோய்களின் பாதிப்பு இருக்கும் என்பதைத் தெரிந்துகொண்டு அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

எப்படி?

ஏ, பி, ஏபி, ஓ என ரத்த வகைகள் இருக்கின்றன. இவற்றில் உள்ள ஆன்டிஜென்களின் இருப்பினைப் பொருத்து பாதிக்கப்படும் நோய்கள் தீர்மானிக்கப்படுகின்றன. அதாவது, ரத்த சிவப்பணுக்களில் குறிப்பிட்ட ஆன்டிஜென்கள் இருப்பது அல்லது இல்லாமல் போவது ஆகியவற்றைக் கொண்டு கணக்கிடப்படுகிறது. மேலும் நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் நுண்ணுயிரிகளுடன்ஆன்டிஜென்கள் தொடர்புடையது.

ஆன்டிஜென் என்பது உடலில் ஆன்டிபாடிகள் அல்லது நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கும் பொருள், ஒரு தொற்று ஏற்படும்போது இதுவே நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு சமிக்ஞைகளை அனுப்பும்.

ஏ ரத்த வகை

ஏ ரத்த வகை உடையவர்களுக்கு ரத்தம் உறைவதற்கு உதவும் வான் வில்பிரான்ட் காரணி என்ற புரதம் அதிக அளவில் இருக்கும். ரத்தம் உறைதலுக்கு உதவும்போது இதன் அளவு அதிகமானால் பக்கவாதம் அல்லது மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.

மேலும் பொதுவாக ஏ ரத்த வகை உள்ளவர்களுக்கு இதய நோய்கள், இரைப்பை புற்றுநோய், பெரியம்மை போன்ற தொற்றுகள் ஏற்படலாம்.

ஓ ரத்த வகை

இந்த ரத்த வகை நபர்களுக்கு பெரும்பாலும் வயிற்றில் அமிலம் அதிகமாக இருக்கும். இதனால் வயிற்றுப் புண்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இதய நோய்களுக்கான ஆபத்து குறைவு.

பி ரத்த வகை

டைப் 2 நீரிழிவு, மல்டிபிள் ஸ்களீரோசிஸ் எனும் தண்டுவட மரப்பு நோய் போன்ற தன்னுடல் தாக்கும் நோய்களுக்கான ஆபத்து அதிகம்.

ஏபி ரத்த வகை

நினைவாற்றல் சிக்கல்கள் ஏற்படலாம். மூளைக்கு போதுமான ரத்த ஓட்டம் இல்லாததன் விளைவாக இது ஏற்படலாம்.

ஆய்வுகளின் மூலமாக ரத்த வகையைப் பொருத்து நோய்களைக் கணித்தாலும் பல்வேறு நோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ள சீரான உணவு எடுத்துக்கொள்ளுதல், உடற்பயிற்சி செய்வது, மன அழுத்தத்தைக் குறைப்பது, புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதலைத் தவிர்ப்பது மிகவும் முக்கியமானது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com