மற்றவர்களைப்போல இல்லையே என்று வருத்தமா?

மற்றவர்களைப் போல இல்லையே என்று வருந்துபவராக இருந்தால் இந்த 10 விஷயங்களைச் செய்யுங்கள்
'நான் இப்படி இல்லையே'  என்று நினைப்பவரா?
'நான் இப்படி இல்லையே'  என்று நினைப்பவரா?

மற்றவர்கள் இப்படியிருக்கிறார்களே, அப்படியிருக்கிறார்களே? ஆனால் நம்மால் அப்படி இருக்க முடியவில்லையே என்று ஏங்குபவர்களாக இருந்தால் தொடர்ந்து படிக்கலாம்.

சில விஷயங்களை நாம் பார்க்கிறோம். ஆனால், அது நமக்கு நடக்கவில்லையே என்று ஏங்குகிறோம். அது ஆரோக்கியமாக இருந்தாலும் அழகாக இருந்தாலும் வெற்றியாக இருந்தாலும்.

அனைத்துமே நமது வாழ்முறையை பின்பற்றியே அமைகிறது.

முதலில் ஒரு பத்து விஷயங்களை மட்டும் சரியாகக் கடைப்பிடித்துப் பாருங்கள். பிறகு நீங்கள் தேடும் அனைத்தும் உங்களைத் தேடி வந்துவிடும்.

1. உறக்கத்துக்கு முதலிடம்

என்னங்க வெற்றிபெற வழிச் சொல்லச் சொன்னால் உறக்கத்துக்கு வழி சொல்கிறீர்களே என்று கேட்டால்.. மருத்துவ நல நிபுணர்கள் சொல்வது அதைத்தான். அதாவது உரிய நேரத்துக்குச் சென்று உறங்கி உரிய நேரத்தில் விழியுங்கள். தூக்கம் தானே. அது எக்கேடோ கெட்டுப்போகிறது என்று விட்டுவிடாதீர்கள்.

2. நடைப்பயிற்சி

கால்களை கொஞ்சமாவது தரையில் ஊன்றி நன்கு நடைப்பயிற்சி செய்யுங்கள். நேரம் செலவிட்டு நடக்க முடியாது என்றால், நடந்து செல்ல வேண்டிய தொலைவில் இருக்கும் இடங்களுக்கு நடந்தே செல்லுங்கள். இல்லையென்றால் சில இடங்களுக்காவது நடந்து செல்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

3

30 நிமிடமாவது வாசியுங்கள்

ஒரு புத்தகத்தை எடுத்து நாள்தோறும் கொஞ்சம் கொஞ்சமாகப் படிக்கத் தொடங்குங்கள். இதனை வழக்கப்படுத்திக் கொண்டால், இந்த 30 நிமிடம் என்பது பெரிய விஷயமாக மாறிவிடும். உங்களை நீங்கள் புதுப்பித்துக் கொள்ளலாம். பெரிய ஆளாகவும் உணரலாம்.

'நான் இப்படி இல்லையே'  என்று நினைப்பவரா?
ப(ந)ஞ்சு மிட்டாய், ஜாக்கிரதை!

4. தியானம்

அது எப்படி செய்ய வேண்டும் என்று கேட்பவர்கள்.. தியானம் எல்லாம் செய்யவே முடியாது என்று நினைப்பவர்கள், ஒரு நாளில் ஒரு 10 நிமிடம் ஒரே இடத்தில் அமைதியாக அமர்ந்திருங்கள். எண்ண ஓட்டங்களை அடக்குங்கள். அங்கே அமர்ந்திருப்பதை மட்டும் உணருங்கள் போதும்.

5. இயற்கை

அதையெல்லாம் எங்கே தேடுவது என்று நினைத்தால் வழியிருக்காது. வீட்டில் இருக்கும் ஒரு சிறு பூந்தொட்டியில் கூட உங்களால் இயற்கையை தேட முடியும். சிறிது நேரம் பூங்காக்களில் நேரத்தை செலவிடலாம். செடிகளுக்கு தண்ணீர் உற்றலாம்.

'நான் இப்படி இல்லையே'  என்று நினைப்பவரா?
நீட் விண்ணப்பம்: அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

6. உணவு

இயற்கையான உணவுகளை உண்ணுங்கள். அதாவது, நீங்கள் சமைக்கும் முன் அந்த உணவுப்பொருள்கள் தவறி மண்ணில் விழுந்தால் முளைத்து செடியாக வேண்டும். அவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

7. குடிநீர்

குடியுங்கள். அதிகம் தண்ணீர் குடியுங்கள். வரப்போகும் கோடைக்காலத்துக்கு சவால் விடுவதாக அதிகமாக தண்ணீர் குடியுங்கள். சுத்தமான நீராக இருக்கட்டும்.

அடுத்து சொல்லப்போவது போதைப் பழக்கம் இருந்தால் விட்டுவிடலாம், செல்ஃபோன் பார்ப்பதைக் குறைத்துக்கொள்ளலாம், மிக நல்ல உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்ற பழக்கம் ஒன்றை புதிதாகக் கைகொள்ளலாம். உங்களுக்குப் பிடித்தவர்களுடன் முடிந்தால் நேரத்தை செலவிடலாம்.

'நான் இப்படி இல்லையே'  என்று நினைப்பவரா?
சென்னை - பெங்களூரு இரண்டடுக்கு ரயிலில் புதிய பெட்டிகள்

இதைச் செய்தால், உங்கள் மனதும் உடலும் உற்சாகமாக இருக்கும். மற்றவர்கள் செய்வதைப் போல நீங்களும் எல்லா பணிகளையும் சிறப்பாகச் சென்று மற்றவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு உயரலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com