வகை வகையான வற்றல்களை போட்டு வைத்துக் கொண்டால், பள்ளி மற்றும் அலுவலகம் செல்வோருக்கு எளிதாக பொறித்துக் கொடுக்கலாம். சுவையும் அசத்தலாக இருக்கும்.
சுவையான பாகற்காய் வற்றல் செய்வது எப்படி?
தேவையான பொருள்கள்:
பாகற்காய்- 300 கிராம்
புளி- 50 கிராம்
மஞ்சள் பொடி- 1 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
பாகற்காயை வட்ட, வட்டமாக நறுக்க வேண்டும். புளியை தண்ணீர்விட்டு கரைத்து வடிகட்டி பாகற்காயுடன் கலந்து உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து அடுப்பில் நன்றாக வேக வைக்க வேண்டும். காய் நன்றாக வெந்தவுடன் தண்ணீரை வடித்துவிட்டு பாகற்காய்த் துண்டுகளை வெயிலில் காய வைக்க வேண்டும். காய்ந்ததும் எடுத்துவைத்து தேவையான போது எண்ணெயில் வறுத்து வத்தக் குழம்பில் சேர்க்கலாம்.
தேவையான பொருள்கள்:
பச்சரிசி- 500 கிராம்
பச்சை மிளகாய்- 10
ஜவ்வரிசி- 50 கிராம்
பிரண்டை- 1 கிண்ணம்
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
அரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைத்தது அதை மாவாக்க வேண்டும். ஜவ்வரிசியை நீர்விட்டு அடுப்பில் வைத்து பாதி வெந்தவுடன் பிரண்டையை அரைத்த விழுது, உப்பு, பச்சை மிளகாய் அரைத்த விழுது சேர்த்து அரிசி மாவையும் சேர்த்து கிளறி ஆறவிட வேண்டும். பின்னர், மாடியில் வெள்ளைத் துணியை விரித்து, மாவை அச்சில் விட்டு பிழிய வேண்டும்.
காய்ந்ததும் எண்ணெய்யில் பொரிக்க வேண்டும்.
தேவையான பொருள்கள்:
பெரிய வெங்காயம், சிறிய வெங்காயம்- தலா 1 கிலோ
கறிவேப்பிலை- 1 கைப்பிடி அளவு
மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
மிளகாய்ப் பொடி- 100 கிராம்
நல்லெண்ணெய்- 200 கிராம்
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி மற்ற பொருள்களோடு சேர்த்து மூன்று நாள்கள் வரை ஊறவைத்து, அதில் சிறிதளவு கடுகு, சீரகம், நல்லெண்ணெய் சேர்த்து பெரிய உருண்டைகளாக உருட்டி வெயிலில் காய வைத்து எடுத்துகொள்ள வேண்டும். தேவையானபோது, தேவையான அளவு எடுத்து எண்ணெயில் பொரித்து புளிவிட்டு செய்யும் கூட்டு அல்லது வற்றல் குழம்பு ஆகியவற்றுடன் சேர்த்தால் குழம்பின் சுவை கூடும்.
-ஆர்.ஜெயலட்சுமி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.