கீழ்முதுகு வலிக்கு நல்ல தீர்வு.. தினமும் 30 நிமிட நடைப்பயிற்சி!

நடைப்பயிற்சி மேற்கொள்வதால் முதுகுவலியை விரட்ட முடியுமா? என்பதைப் பற்றி இக்கட்டுரையில்...
முதுகுவலி
முதுகுவலி
Updated on
1 min read

லான்செட் இதழின் சமீபத்திய ஆய்வுபடி தினமும் 30 நிமிடம் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் கீழ் முதுகுவலியை கணிசமாகக் குறைக்க உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முதுகு வலி என்பது தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி அனைவருக்குமான பொதுவான பிரச்னையாக மாறியுள்ளது. முதுகு வலிக்கு பலவித காரணங்கள் உண்டு. முதுகுப் பகுதியைச் சார்ந்த எலும்புகள், தசைகள், தசை நாண்கள், இடைவட்டு ஆகியவற்றில் ஏற்படுகிற பிரச்னையை முதுகு வலிக்கு முதன்மை காரணங்களாகச் சொல்லப்படுகிறது.

ஒரு சிலருக்கு வயிற்றில் ஏற்படும் பிரச்னைகளாலும் கீழ் முதுகில் வலி உண்டாகலாம், உதாரணத்துக்கு சிறுநீர்ப் பையில் கல் உள்ளவர்களுக்கு முதுகில் வலி ஏற்படும், வெள்ளைப்படுதல் பிரச்னை இருக்கும் பெண்களுக்கு முதலில் முதுகில்தான் வலி ஆரம்பிக்கும். கணினியில் அதிக நேரம் அமர்வது, இருசக்கர வாகனத்தில் நெடுந்தூர பயணம் மேற்கொள்வது, அதிக பளுவைத் தூக்குவது, ஊட்டச்சத்துக் குறைபாடு, உடல் பருமன் போன்ற காரணங்களாலும் முதுகெலும்பு இடைவட்டில் அழுத்தம் அதிகமாகி முதுகின் கீழ்ப் பகுதியில் வலி ஏற்படுகிறது.

முதுகுவலி
'சிரிப்புக் கோளாறு' என்றொரு பிரச்னையா? நடிகை அனுஷ்காவின் அவதி அனுபவம்!

சமீபத்தில் லான்செட் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வது கீழ் முதுகு வலியைக் குறைப்பதாகத் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வின் மூலம் ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளிலிருந்தும் 54 வயது நிரம்பிய சுமார் 701 பேர் உட்படுத்தப்பட்டனர்.

ஆராய்ச்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, அதில் ஒரு பிரிவினர் ஒரு சில வழிகாட்டு முறைகளைக் கடைப்பிடிப்பவர்களாகவும் (intervention group), மற்றொரு பிரிவினர் எந்த ஒரு சிகிச்சை வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றாத சாதாரண வாழ்க்கை முறையை பின்பற்றவர்களாகவும் இருந்துள்ளனர்.

முதுகுவலி
சத்தான உணவுகள் பார்கின்சன் நோயை எதிர்கொள்ள உதவுகிறதா?

பிசியோதெரபி மருத்துவர்களின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுபவர்கள் தினமும் ஆறு மாதங்களுக்கு மருத்துவரின் ஆறு அமர்வுகளில் கலந்துகொண்டுள்ளனர். ஆறு மாதங்களுமே ஒவ்வொரு நாளும் தோராயமாக 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. மற்றொரு பிரிவினர் எந்த உடற்பயிற்சியும் மேற்கொள்ளாமல் இருந்தனர். இறுதியில் தினமும் நடைப்பயிற்சி மேற்கொண்டவர்களுக்கு கீழ் முதுகு வலி குறைந்துள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்துள்ளன.

எனவே தினமும் குறைந்தது 30 நிமிட நடைப்பயிற்சியான முதுகின் கடினத்தன்மையைக் குறைந்து முதுகுவலியைப் போக்கும் என்கிறது ஆய்வு. நாமும் தினமும் நடைப்பயிற்சி மேற்கொண்டு உடலைப் பேணி காப்பதோடு, கீழ் முதுகுப்பகுதியின் வலியிலிருந்து விடுபடுவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com