மைக்ரேன் தலைவலியால் பாதிக்கப்படும் பதின்வயதினர்! ஏன்? தீர்வு என்ன?

பதின் வயதினரிடையே அதிகரித்து வரும் மைக்ரேன் தலைவலிக்கான காரணங்கள், தீர்வுகள் பற்றி...
headache
பிரதிப் படம் ENS
Published on
Updated on
2 min read

டாக்டர் முகேஷ் பத்ரா

உங்கள் பதின் வயது மகன் அல்லது மகள், சமீபமாக அடிக்கடி தலைவலி இருப்பதாகக் கூறுகிறார்களா?

அவ்வாறெனில் இது உடனடியாக கவனிக்க வேண்டிய விஷயம்.

பதின்ம வயதினரிடையே 'மைக்ரேன்' எனும் நாள்பட்ட ஒற்றைத் தலைவலி(chronic migraine) அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்த தலைவலிக்கு மன அழுத்தம், சோர்வு, தூக்கமின்மை காரணமாக இருக்கிறது.

தி இந்தியன் ஜர்னல் ஆஃப் பீடியாட்ரிக்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், கடந்த ஆண்டில் 2,235 இளம் பருவத்தினரில் 57.5% பேர் அடிக்கடி தலைவலி ஏற்பட்டதாகத் தெரிவித்தனர்.

சுமார் 2% பேருக்கு நாள்பட்ட மைக்ரேன் தலைவலி (chronic migraines) இருப்பதாக கண்டறியப்பட்டது. பதின் வயதினரில் ஆண்களைவிட பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் பாதுகாப்பான, இயற்கையான சிகிச்சைக்கு ஹோமியோபதி முறையைத் தேர்வு செய்யலாம்.

ஏனெனில் இதன் மூலமாக அறிகுறிகளைக் கட்டுப்படுவதற்குப் பதிலாக பிரச்னையின் மூலக் காரணத்தைப் புரிந்துகொள்ளலாம்.

மைக்ரேன் தலைவலி

மைக்ரேன் தலைவலி என்பது நெற்றியின் ஒரு பக்கத்தில் துடிப்பது போன்ற உணர்வு இருந்துகொண்டே இருக்கும். இந்த தலைவலி பல மணிநேரங்கள் முதல் சில நாட்கள் வரை நீடிக்கும், இதனால் கடுமையான அசௌகரியம் ஏற்படும், அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்படும். இந்த ஒற்றைத் தலைவலியால் குமட்டல், வாந்தி, ஒளி, ஒலி மாற்று பார்வைத் திறன் கோளாறுகளை ஏற்படுத்தும்.

இந்த வகையான ஒற்றைத் தலைவலிகள் பொதுவாக இளம் வயதிலும் 30களிலும் ஏற்படும். பதின்ம வயதினரிடையே, ஒற்றைத் தலைவலி ஏற்படுவது அவர்களின் உடல் நலனையும், கல்வி, சமூக வாழ்க்கையை சீர்குலைக்கும்.

எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கண்காணித்து ஒற்றைத் தலைவலி இருந்தால் பரிசோதித்து, சரிசெய்யும் வழிமுறைகளைக் கடைப்பிடித்து, சிறந்த வாழ்க்கைத் தரத்தை உறுதிசெய்ய வேண்டும்.

Headaches
Headaches

ஹார்மோன்: இளமை பருவத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் இரு தரப்பினரிடமும் குறிப்பாக பெண்களிடையே ஒற்றைத் தலைவலியைத் தூண்டும்.

ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்கள் குறிப்பாக மாதவிடாயில் பிரச்னைகளையே ஏற்படுத்தும். அதுபோல இரு தரப்பினரும் பருவமடையும் போது, உடலில் ஏற்படும் விரைவான மாற்றங்களால் ஹார்மோன் தூண்டப்பட்டு ஒற்றைத் தலைவலி ஏற்படலாம்.

இந்த ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளைக் கட்டுப்படுத்த பல்சட்டிலா(Pulsatilla), செபியா(Sepia) போன்ற மருந்துகள் பயனுள்ளதாக இருக்கும்.

மாதவிடாய் சுழற்சிகள் தொடர்பான ஒற்றைத் தலைவலிக்கு பல்சட்டிலா உதவுகிறது. ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக சோர்வு அல்லது எரிச்சலுடன் ஒற்றைத் தலைவலி இருந்தால் செபியா பயன்படுத்தலாம்.

உணவு: சாக்லேட், காஃபின், பதப்படுத்தப்பட்ட உணவுகள், செயற்கை இனிப்புகள் போன்ற சில உணவுகள் மற்றும் பானங்கள் ஒற்றைத் தலைவலியை ஏற்படுத்தும். உணவைத் தவிர்ப்பது அல்லது பொருந்தா, துரித உணவுகளைச் சாப்பிடுவது போன்ற மோசமான உணவுப் பழக்கங்களும் ரத்த சர்க்கரை அளவில் சமநிலையின்மையை உருவாக்கி ஒற்றைத் தலைவலி ஏற்படக் காரணமாகும்.

<P>HEADACHE-REPRESENTATION103830.JPG</P>

HEADACHE-REPRESENTATION103830.JPG

Center-Center-Kochi

மன அழுத்தம்: கல்வி, சிறப்புப் பயிற்சிகள், சமூக வாழ்க்கை ஆகியவற்றின் அழுத்தங்கள், பதின்ம வயதினருக்கு மன அழுத்தத்தை உருவாக்கலாம். இதனால் ஒற்றைத் தலைவலி ஏற்படலாம்.

நாள்பட்ட பதட்டம், மன உளைச்சல் இதன் தீவிரத்தை அதிகப்படுத்துகின்றன.

காளி போஸ்(Kali Phos) என்ற மருந்து மன அழுத்தத்தால் ஏற்படும் ஒற்றைத் தலைவலிக்கு சிறந்த தீர்வாகும்.

அர்ஜென்டம் நைட்ரிகம்(Argentum Nitricum) பதட்டம் அல்லது மன அழுத்தத்தால் ஏற்படும் ஒற்றைத் தலைவலிக்கு பயனுள்ளதாக இருக்கும். இது மனதை அமைதிப்படுத்த உதவுகிறது.

மரபணு: குடும்பத்தில் யாருக்கேனும ஒற்றைத் தலைவலி இருந்தால் இளம் வயதினருக்கும் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

மரபணு ரீதியாக ஒற்றைத் தலைவலி ஏற்படும் வாய்ப்புள்ளவர்கள் சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கை முறைகளில் கவனம் செலுத்த வேண்டும்.

இவர்களுக்கு கால்கேரியா கார்போனிகா(Calcarea Carbonica) என்ற மருந்து பரிந்துரைக்கப்படுகிறது. இதனால் பாதிப்பின் தீவிரத்தை குறைக்க முடியும்.

லாசெசிஸ்(Lachesis), பரம்பரை ஒற்றைத் தலைவலிக்கு பயனுள்ளதாக இருக்கும், குறிப்பாக ஹார்மோன் பிரச்னைகளால் உண்டாகும் தலைவலிக்குத் தீர்வாக இருக்கும்.

சுற்றுச்சூழல் காரணிகள்: கடுமையான மணம், பிரகாசமான விளக்குகள், அதிக சத்தங்கள், வானிலையில் ஏற்படும் மாற்றங்கள் சிலருக்கு ஒற்றைத் தலைவலியைத் தூண்டும்.

அதிக நேரம் கணினி, ஸ்மார்போன் பயன்படுத்துவது, காற்று மாசு ஆகியவையும் காரணமாகலாம். அதிக வெப்பம் மற்றும் வெளிச்சத்தினால் ஏற்படும் ஒற்றைத் தலைவலிக்கு குளோனோயின்(Glonoine) பயனுள்ளதாக இருக்கும்.

அதிக சத்தம் அல்லது சுற்றுச்சூழல் மாற்றங்களால் ஏற்படும் தலைவலிக்கு பெல்லடோனா(Belladonna) சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.

(கட்டுரையாளர் - டாக்டர் பத்ரா ஹெல்த்கேர் நிறுவனர் மற்றும் தலைவர்)

தமிழில்: எம். முத்துமாரி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com