செல்ஃபோனை 100% சார்ஜ் செய்யவே கூடாதா? செய்தால்?

எப்போதும், செல்ஃபோனை 100% சார்ஜ் செய்தால் பேட்டரி செயலிழக்கும்
செல்போன்
செல்போன்
Published on
Updated on
1 min read

மனிதர்கள் சரியாக சாப்பிடுகிறார்களோ இல்லையோ.. எப்போதும் போனுக்கு சார்ஜ் போட்டு, அதற்கு கவர் போட்டு, மழையில் நனையாமல், கீழே விழுந்தால் பதறித் துடித்து அவ்வளவுப் பாதுகாப்பாக வைத்துக்கொள்கிறார்கள்.

முதலில், பட்டன் வைத்த செல்போன்கள் வந்த காலத்திலிருந்து இப்போது வரை பல்வேறு தொலைத் தொடர்பு தொடர்பு சாதனங்களின் முக்கியத்துவத்தை இழக்கவைத்து, மனிதர்களின் நிழல்போல மாறியிருப்பது செல்போன். ஒரு மனிதன் எங்கிருந்தான், எங்கிருக்கிறான் என்பதை செல்போன் லோகேஷன் மூலமே அறிந்துகொள்கிறார்கள் என்றால், அது மனிதர்களுடன் கலந்துவிட்டதாகத்தானே அர்த்தம்.

தற்போது ஸ்மார்ட் போன்களில் பேட்டரிகளை தனியே வெளியே எடுக்க முடியாது. பேட்டரியை மாற்றவும் முடியாது. எனவே, செல்போனின் உயிர் போன்ற பேட்டரியை பக்குவமாகப் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

எனவே, ஒரு செல்போனின் பேட்டரி நீண்ட நாள்களுக்கு நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்றால், எப்போதும் செல்ஃபோனை முழுமையாக சார்ஜ் போடக்கூடாதாம். அடிக்கடி 100 சதவீதம் சார்ஜ் போடுவதால்தான் செல்போன் விரைவில் செயலிழக்கிறதாம்.

முதல் 60 சதவீதம் சார்ஜ் ஆகும் வரைதான் பேட்டரியின் வோல்டேஜ் அதிகமாக இருக்கும். அதன் பின்னர், படிப்படியாகக் குறையுமாம்.

ஆனால், எப்போதுமே 100 சதவீதம் சார்ஜ் போடக்கூடாதா என்றால், அப்படியில்லை. எப்போதாவது போடுவதால் பிரச்னை இல்லை. எப்போசூம 100 சதவீதம் சார்ஜ் போட்டால், பேட்டரி விரைவில் செயலற்றுப்போகலாம் என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

எனவே, ஒரு செல்போனை வழக்கமாக 80 சதவீதம் வரை மட்டுமே சார்ஜ் போட்டு, அதனைப் பயன்படுத்துவது நல்லது. 100 சதவீதம் சார்ஜ் போட்டு, பேட்டரி அதிக வோல்டேஜில் தொடர்ந்து இயங்க வேண்டிய அவசியமில்லை என்பதால், பேட்டரியின் ஆயுள் நீடிக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com