குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படுமா? உண்மை என்ன?

மன அழுத்தம் தொடர்பான தவறான நம்பிக்கைகளும் உண்மைகளும்...
children
ENS
Updated on
1 min read

மன அழுத்தம் உள்ளிட்ட மனநலப் பிரச்னைகள் நோய்களாக கருதப்படுமா? மன அழுத்தம் இருந்தால் சாதாரணமாக இருக்க முடியாதா? குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படுமா?

மன அழுத்தம் தற்போது அதிகரித்து வரும் சூழ்நிலையில் அதுதொடர்பான தவறான நம்பிக்கைகளுக்கு பதிலளிக்கிறார் திருவனந்தபுரம் கிம்ஸ்ஹெல்த் மனநல மருத்துவர் டாக்டர் ஜிதா.

தவறான நம்பிக்கைகளும் உண்மைகளும்

மனநலப் பிரச்னைகள் நோய்கள் அல்ல

மன நலப் பிரச்னைகளும் நீரிழிவு அல்லது ஆஸ்துமாவைப் போலவே மருத்துவ நிலைகளாகும். மனச்சோர்வு இல்லாதவர்களுக்கும் மனச்சோர்வு அல்லது ஓசிடி எனும் தீவிரமான மனநலக் கோளாறு உள்ளவர்களுக்கும் மூளைச் செயல்பாடு மற்றும் உடல் ரீதியான வேறுபாடுகள் இருப்பதை ஸ்கேன்கள் காட்டுகின்றன. மனச்சோர்வு இருந்தால் உடல்நிலையிலும் மாற்றம் ஏற்படுகிறது.

பலவீனமானவர்கள் மட்டுமே மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்படுகிறார்கள்

உடலளவில் மனதளவில் பலவீனமானவர்கள் என்று இல்லை. யார் வேண்டுமானாலும் மனநல சவால்களை எதிர்கொள்ளலாம். மனச்சோர்வு ஏற்படுவதற்கும் மன உறுதிக்கும் அல்லது பலவீனமாக இருப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது மரபியல், உயிரியல், சுற்றுச்சூழல் ஆகியவற்றின் ஒரு சிக்கலான கலவையாகும். உலகின் வெற்றிகரமான விளையாட்டு வீரர்கள் மற்றும் தலைவர்கள் பலரும் மனநலனை சரியான முறையில் நிர்வகித்து வருகின்றனர்.

school children from eps
கோப்புப்படம்EPS

உங்களுக்கு மன அழுத்தம் இருந்தால், உங்களால் சாதாரணமாக வேலை செய்யவோ அல்லது வாழவோ முடியாது.

மனநலப் பிரச்னைகளுக்கு சரியான சிகிச்சையும் ஆதரவும் இருந்தால் சாதாரணமாக வேலை செய்ய முடியும், நல்ல வாழ்க்கையை வாழ முடியும். மனநலப் பிரச்னைகள் உள்ள பெரும்பாலானோர் உரிய சிகிசைகள் மூலமாக வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்கின்றனர்.

குழந்தைகளுக்கு மனநலப் பிரச்னைகள் வராது

குழந்தைகளும் அது வளர்கின்ற சூழலைப் பொருத்து மனநலப் பிரச்னைகள் வரலாம். இந்த அறிகுறிகள் மிகச் சிறிய வயதிலேயே தொடங்கலாம். மனநலப் பிரச்னைகளில் பாதி பேருக்கு குழந்தை பருவத்தில் இருந்தே தொடங்குகின்றன. குழந்தைகளும் பதின்ம வயதினரும் பதற்றம், மனச்சோர்வு உள்ளிட்ட அறிகுறிகளை எதிர்கொள்ளலாம். ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதிசெய்ய சிறு வயதிலேயே மன அழுத்தத்தைக் கண்டறிந்து சரிசெய்வது சிறந்தது.

Summary

Myths and Facts about mental health

children
மன அழுத்தமா? மரபணுவும் ஒரு காரணம்! மன நலனுக்கு என்ன செய்வது?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com