நெருங்கும் தீபாவளி! புலம்பெயர் தொழிலாளர்களால் நிரம்பும் ரயில்களும் நிலையங்களும்காவிரி விவகாரம்: கர்நாடகத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர முறையீடுராஜிநாமா எம்எல்ஏ-க்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்ட நடவடிக்கை கோரிய மனு தள்ளுபடி!ஜெயிலர் - 2 ஓடிடியில் நவ. 12-இல் வெளியாகிறது!முதல்வரின் அலுவல்பூர்வ இல்லமாக ‘பாமணி இல்லம்’! விஜய் ஆய்வு!கவின் ஆணவ கொலை வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

பிசிஓஎஸ் பிரச்னையா? பாதிப்பைக் குறைக்க உடற்பயிற்சி உதவுமா?

பிசிஓஎஸ் பாதிப்பைக் குறைக்க உடற்பயிற்சி உதவுமா என்பது பற்றி நிபுணர்கள் கூறுவது..

Exercise and PCOS

கோப்புப் படம் - ENS

Updated On :

பிசிஓஎஸ் மற்றும் கருப்பை புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளவர்களுக்கு, அதன் பாதிப்புகளைக் குறைக்க உடற்பயிற்சி உதவும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) என்பது இன்று பெண்களிடையே அதிகரித்து வரும் ஒரு கோளாறு. ஒழுங்கற்ற மாதவிடாய், உடல் எடை அதிகரிப்பு, முகப்பரு, கருத்தரிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் இருந்தால் அது பிசிஓஎஸ் ஆக இருக்கலாம். ஒவ்வொருவரையும் பொறுத்து இதன் விளைவுகள் மாறுபடும்.

பிசிஓஎஸ் உள்ள பெண்களுக்கு எண்டோமெட்ரியல் புற்றுநோய் உள்பட, கருப்பையில் பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் அதிகமாக இருக்கலாம்.

ஏனெனில் பிசிஓஎஸ் உள்ள பல பெண்களுக்கு, அண்டவிடுப்பு (ovulation) சீராக நடக்காது, இதனால் மாதவிடாய் ஒழுங்கற்றதாக இருக்கலாம், பல மாதங்களுக்கு மாதவிடாய் வராமல் போகலாம்.

இது மீண்டும் மீண்டும் நிகழும்போது இதனைச் சமநிலைப்படுத்தப் போதுமான புரோஜெஸ்ட்டிரோன் இல்லாததால் ஈஸ்ட்ரோஜன் அதிகம் சுரக்கிறது. இதனால் கருப்பை உள்படலம் தடிமனாக மாறலாம். சிலருக்கு இறுதியில் எண்டோமெட்ரியல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் வரலாம்.

பிசிஓஎஸ் உடன் உடல் பருமன், நீரிழிவு நோய் இருக்கும்போது பாதிப்புகள் அதிகமாக இருக்கலாம்.

உடற்பயிற்சி உதவுமா?

பிசிஓஎஸ் உள்ள பல பெண்களுக்கு இன்சுலின் சுரப்பு அதிகமாக இருக்கலாம், இது உடல் எடையைக் குறைப்பதை மேலும் கடினமாக்கும். மேலும் ஹார்மோன் மாற்றங்களினாலும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

உடற்பயிற்சி செய்வது பிசிஓஎஸ்-க்கு ஒரு தீர்வாக இல்லை எனினும் அது பாதிப்புகளைக் குறைக்க உதவுகிறது. இன்சுலின் அளவை சமநிலைப்படுத்த உடற்பயிற்சி உதவுகிறது. உடல் எடை மேலும் அதிகரிப்பதைக் குறைக்கும்.

பிசிஓஎஸ் உள்ள பெண்கள் அனைவரும் உடல் பருமன் கொண்டிருப்பதில்லை. உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்வது நல்ல பலனைத் தரும். நடப்பது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், நடனம், ஜாக்கிங், யோகா ஆகியவற்றைச் செய்யலாம். இத்துடன் சமச்சீரான உணவும் அவசியம்.

வாரத்திற்கு 150 நிமிடங்கள் (இரண்டரை மணி நேரம்) உடற்பயிற்சி செய்வது நல்லது. வாரத்திற்கு 5 நாள்கள், ஒரு நாள் 30 நிமிடங்கள் பயிற்சி செயலாம். எடுத்தவுடன் அரை மணி நேரம் என்றில்லாமல் 10 நிமிடம், 15 நிமிடம் எனத் தொடங்கி படிப்படியாக அதிகரிக்க வேண்டும்.

உடலை வலுப்படுத்தும் கார்டியோ பயிற்சிகளையும் 'ஹிட்' (HIIT) பயிற்சிகளையும் மேற்கொள்ளலாம். இது இன்சுலின் அளவை சமநிலைப்படுத்தி உடல் எடையைக் கட்டுப்படுத்துகிறது, நீரிழிவு அபாயத்தையும் குறைக்கும்.

பிசிஓஎஸ் என்பது மாதவிடாய் அல்லது கருவுறுதலில் ஏற்படும் கோளாறு மட்டுமல்ல. வளர்சிதை மாற்றம், ஹார்மோன் ஆரோக்கியத்தையும் பாதிக்கக் கூடும் என்பதால் உடற்பயிற்சி செய்வதன் மூலம் மற்ற பாதிப்புகளைக் குறைக்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

மேலும் உடற்பயிற்சி செய்யும்பது உடலில் கார்டிசோல் அளவைக் குறைத்து மன அழுத்தத்தைக் குறைக்கிறது என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

Summary

Can exercise help reduce its impact of PCOS?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER