காலையில் எழுந்ததும்... தன்னுடைய அழகின் ரகசியத்தைப் பகிர்ந்தார் குஷ்பு
காலையில் எழுந்ததும் அரை மணி நேரம் முகத்துக்காக செலவிடுவேன் என்று தன்னுடைய அழகின் ரகசியத்தைப் பகிர்ந்தார் குஷ்பு

நடிகை குஷ்பு - கோப்புப் படம்
மிகப்பெரிய நடிகைகளுக்கு எல்லாம் இல்லாத, கிடைக்காத கௌரவம் நடிகை குஷ்புவுக்குக் கிடைத்தது என்றால் அது மிகையில்லை. தமிழ்நாட்டில் நடிகை குஷ்புவுக்கு கோயில் கட்டி அவரது தொண்டர்கள் வழிபட்ட கதையெல்லாம் உண்டு.
இப்போதும் நடிகை குஷ்பு தன்னுடைய அழகை அதே விதத்தில் பராமரித்து வருகிறார். குடும்பம், நடிப்பு, அரசியல் என பன்முகங்களைக் கொண்ட நடிகை குஷ்பு, தன்னுடைய அழகின் ரகசியத்தை அன்பான ரசிகர்களுக்காகப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
ஒரு செய்தி ஊடகத்துக்கு அவர் அளித்தபேட்டியில் நான் தினமும் காலையில் மிகவும் சீக்கிரம் எழும் பழக்கம் கொண்டவர். தினமும் காலை 4.30 மணியிலிருந்து 5 மணிக்குள் எழுந்துவிடுவேன்.
முதலில் எனது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தேநீர் போடுவதுதான் என் வேலை. அப்போது தேநீர் கொதிப்பதற்குள் காய்ச்சாத பாலை கொஞ்சம் எடுத்த எனது முகத்தில் தேய்த்துக் கொள்வேன்.
காலையில் எழுந்ததும் பச்சை பால் முகத்தில் தேய்த்துக் கொள்வது நல்ல பலனைக் கொடுக்கும்.
ஆனால், எல்லா நாளும் அப்படியில்லை. சில நாள்கள் குங்குமப்பூ கலந்த பன்னீரை முகத்தில் தேய்த்து மசாஜ் செய்வேன்.
அடுத்த நாள், தேங்காய் எண்ணெய் போட்டு கைகளால் முகத்துக்கு மசாஜ் செய்வேன். இப்படியே ஒரு நாள் பாதாம் எண்ணெய் என எனக்கு என்ன தோன்றுகிறதோ அன்றைய நாள் அதைச் செய்வேன்.
நாள்தோறும் முகத்துக்காக ஒரு அரை மணி நேரம் கண்டிப்பாக செலவிடுவேன். அதுவும் காலையில் எழுந்ததும் முகத்துக்கு செய்யும் மசாஜ் நிச்சயம் நல்ல பலனைக் கொடுக்கும் என்கிறார்.
இதுவரை ஆயிரக் கணக்கில் க்ரீம் வாங்கி பயன்படுத்தியவர்களுக்கு இத்தனை நாளாக இது தெரியாமல் போய்விட்டதே என்று தோன்றலாம். சரி இப்போதாவது தெரிந்து கொண்டோமே... இனி குஷ்பு பாணியில் முக அழகைப் பராமரிக்கலாம்.
Summary
Upon waking up in the morning... Khushbu shared the secret of her beauty.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

