தான் வெற்றி பெற்றது மட்டுமின்றி, எல்லாப் பெண்களும் அதிகாரம் பெற வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு பல முயற்சிகளை மேற்கொண்டவர். பிறந்திருப்பது பெண் குழந்தை என்பதாலேயே, பிறப்பிலேயே நிராகரிக்கப்பட்ட குழந்தைகளுக்கான தொட்டில் குழந்தை திட்டத்தினால் பல பெண்குழந்தைகள் சிசுவிலேயே கொல்லப்படாமல் தப்பிப் பிழைத்தன. பெண் குழந்தைகளுக்கு சைக்கிள், மடிக் கணினி, சானிட்டரி நாப்கின், சுய உதவிக் குழு, விலையில்லா ஆடு மாடு, அடுக்களைச் சாதனங்கள், தாலிக்குத் தங்கம், பிரசவ ஆலோசனை, உதவித் தொகை, ஆரோக்கியத்திற்கான அம்மா கிட் எனத் தொடங்கி உள்ளாட்சிகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு வரை பெண்களின் ஒவ்வொரு பருவத்திற்கும் திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தியதன் மூலம் அவர் இன்று தமிழகத் தாய்க் குலத்தின் ஆழமான அன்பைப் பெற்றார்.