மறைந்த பாப் ஸ்டார் மைக்கேல் ஜாக்ஸன் மகன் ப்ரின்ஸ், தன் தந்தையைப் போல தானும் ஒரு பாப் ஸ்டாராக வேண்டும் என்று தன்னைச் சுற்றியுள்ள நண்பர்கள் விரும்பினாலும் தனக்கு அதில் விருப்பமில்லை என்று லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிகை பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். பாட்டு, நடனம் போன்ற துறைகளை விட தனக்கு எப்போதும் இயக்கம், தயாரிப்பு உள்ளிட்ட துறைகளில் தான் அதிக ஆர்வமிருக்கிறது என்றும், தனது இந்த ஆர்வம் மறைந்த தன் தந்தை ஜாக்ஸனுக்கும் முன்பே தெரியும் எனறும் அவர் குறிப்பிட்டார். 19 வயது ப்ரின்ஸின் இந்த தீர்க்கமான முடிவு மூன் வாக் புகழ் ஜாக்ஸன் ரசிகர்களுக்கு வேண்டுமானால் சற்று ஏமாற்றம் தரலாம். ஆனால் ப்ரின்ஸ் தனக்கு என்ன் தேவை என்பதில் தெளிவாகவே இருக்கிறார்.
2009 ஆம் வருடம் கடுமையான புரொப்பொஃபோல் மற்றும் பென்ஸோடையாஸெபைன் போதைப் பொருள் உட்கொண்டதால் ஏற்பட்ட நச்சால் மைக்கேல் ஜாக்ஸன் இறந்த பின் ப்ரின்ஸ் தன் தந்தையின் வழிகாட்டுதலை இழந்து விட்டார். தந்தை இறந்தாலும் அவர் தங்களோடு வாழ்ந்த காலத்தில் தங்களுக்காக அவர் கூறிய அறிவுரைகளை தான் எப்போதும் மறந்ததே இல்லை என ப்ரின்ஸ் தெரிவித்துள்ளார்.
தனது தந்தை தனக்காக விட்டுச் சென்ற அறிவுரையாக ப்ரின்ஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தது என்னவெனில், “யாரையும் உடனடியாக நம்பி விடாதே, அவர்கள் சொல்வது நல்ல விசயங்களாகவே தோற்றமளித்தாலும் கூட, உனக்கு அது நல்லதா? கெட்டதா? என்று தீர ஆராய்ந்தே எந்த முடிவையும் எடுக்க வேண்டும். என்பதே என் தந்தை எனக்குச் சொன்ன கடைசி அறிவுரை... மேலும் இன்று என்னுடனும், எனது சகோதரர்களுடனுடம் அறிமுகமில்லாத பலரும் கலந்துரையாடவும் நட்பு கொள்ளவும் விரும்புவதும் கூட தனது அப்பாவின் புகழால் தானே தவிர, எங்களை எங்களுக்காக யாரும் அடையாளம் காணவோ, அங்கீகரிக்கவோ இல்லை” என்பதையும் தான் உணர்ந்தே இருப்பதாக ப்ரின்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது அப்பாவிடம் தான் முன்பே தெரிவித்ததைப் போல் இயக்கம் மற்றும் தயாரிப்பு வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தப் போவதாகவும் தன்னைச் சுற்றியிருப்பவர்கள் எதிர்பார்ப்புக்கு இணங்க அப்பாவைப் போல ஒரு பாப் ஸ்டாராக விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எரிபொருள் விநியோக சிக்கலுக்கு தீா்வுகாண இந்தியா-கத்தாா் ஆலோசனை

கரூா் தொகுதியில் வெல்வேன்: தவெக வேட்பாளா் பேட்டி

ஐ-பேக் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தரப்பில் வலியுறுத்தல்

மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


