தேனாற்றில் மிதக்க வைக்கும் ஸ்ரீவாணியின் வீணா கானம்ருதம்!

தொலைகாட்சி சேனல்கள் சூப்பர் சிங்கர், சன் சிங்கர் என்றெல்லாம் போட்டிகள் நடத்தி வாய்ப்பாட்டுக்கு அளிக்கும் வரவேற்பை ஏன் இது போன்று இசைக்கருவிகள் வாசிப்பதில் திறமையானவர்களுக்கும் அளிக்கக் கூடாது? என்ற கே
தேனாற்றில் மிதக்க வைக்கும் ஸ்ரீவாணியின் வீணா கானம்ருதம்!
Updated on
1 min read

இந்தப் பெண்ணும் கொள்ளை அழகு இவரது வீணை இசையும் அழகோ அழகு! யார் இவர்? 

இவரது பெயர் ஸ்ரீவாணி, தெலுகு வனிதா டி.வி யின் ஆங்கராக இருப்பவர் வீணையிசையிலும் இப்படி அசத்துவது அற்புதம். 

பிரபல வார இதழிலில் இவரது அறிமுகத்தைப் பார்த்து விட்டு இவரது முகநூல் பக்கத்தை திறந்தால் காதுக்கினிய இசையமுதம் தேனாற்றில் மிதப்பதை போல் திக்கு முக்காட வைக்கிறது.  இசைக்கருவிகளில் வீணையை நாதத்தின் அரசி எனலாம்அதன் உருவத்தாலும் உள்ளிருக்கும் நளினத்தாலும்  வீணை கம்பீரத்தின் குறியீடு என்றால் அது மிகையில்லை. இன்று வீணை கற்றுக் கொள்ளும் நபர்கள் மிகக் குறைவு. இது போன்ற நயமான வாசிப்பைக் கேட்கும் போது தொலைகாட்சி சேனல்கள் சூப்பர் சிங்கர், சன் சிங்கர் என்றெல்லாம் போட்டிகள் நடத்தி வாய்ப்பாட்டுக்கு அளிக்கும் வரவேற்பை ஏன் இது போன்று இசைக்கருவிகள் வாசிப்பதில் திறமையானவர்களுக்கும் அளிக்கக் கூடாது? என்ற கேள்வி எழுகிறது. சம்பந்தப்பட்டோர் கவனித்து ஆவன செய்தால் இசைக்கலை மேலும் பரிணமிக்கும்.

வீணை ஸ்ரீவாணீயின் வீணையிசை மட்டுமல்ல ரசித்து வீணை இசைக்கும் போது அவரது முகபாவங்களும் வெகு ரசனை!


வீணை ஸ்ரீவாணியின் வீணையிசையில் சந்திரமுகி ரா...ரா பாடல் 

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ பாடல் ஸ்ரீவாணியின் வீணையிசையில் 

சூப்பர் ஹிட் தளபதி படப் பாடலான “காட்டுக் குயிலு மனசுக்குள்ள “ஸ்ரீவாணியின் வீணையிசையில் 

அதிவேக தர்பார் வர்ணத்தில் ஒரு வீணையிசைக் கோர்ப்பு 

7 ஜி ரெயின்போ காலனி படத்தின் ’நெருங்கி நெருங்கி’  பாடல் வீணையிசையில் 

எஸ்.பி.பி யின் ’மண்ணில் இந்த காதலன்றி பாடல்’ வீணையிசையில் 

வீணையில் பல வகைகள் உள்ளன. ருத்ர வீணை, சித்ர வீணை, விசித்திர வீணை, சரஸ்வதி வீணை, திரிவேணி வீணை, இந்த வகைப்பாட்டில் பொதுவாக கர்நாடக இசைக்கச்சேரிகளில் சரஸ்வதி வீணையும், ருத்ர வீணையும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இங்கே ஸ்ரீவாணி இசைப்பது சரஸ்வதி வீணையில். இசை கேட்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் நாம் ஒவ்வொருவரும் வாழ்நாளில் ஒரே ஒரு இசைக்கருவியையாவது வாசிக்கக் கற்றுக் கொள்வோம் எனும் முனைப்போடு இருந்தால் இசைக்கருவிகளின் வளர்ச்சிக்கும் கற்றுக் கொள்ளும் நமக்கும்  நலமுண்டாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com