மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மன அழுத்தத்தைப் போக்க உதவும் மைன்ட் ஃப்ரெஷ் கான்செப்ட்!

யானை நிச்சயமா பறக்காது. ஆனால் மனசு பலமாக இருந்தால் அதனால் எவ்வளவு பெரிய சுமையையும் தூக்கிகிட்டு பறக்க முடியும்'' என்பதுதான் கான்சப்ட்.

News image
Updated On :28 செப்டம்பர் 2016, 8:41 am

ஸ்ரீதேவி குமரேசன

இன்றைய சூழலில் பெரும்பாலும் எல்லாருக்கும் டென்ஷன் நிறைந்த வாழ்க்கையே. பிள்ளைகளால் பெற்றோருக்கு, பெற்றோரால் பிள்ளைகளுக்கு, அதிக மதிப்பெண் எடுக்க, பணிச் சுமை, இப்படி யாரைப் பார்த்தாலும், எதை எடுத்தாலும் ஏதாவது ஒரு டென்ஷன். இது நாளடைவில் மன அழுத்தத்தை ஏற்படுத்தி வாழ்க்கையையே தொலைத்துவிடச் செய்கிறது. டென்ஷனை குறைத்துக் கொள்ள, "மைன்ட் ஃபிரஷ்' எனும் கான்சப்ட்டின் மூலம் வழிகாட்டுகிறார் கீர்த்தன்யா.
இவரை சென்னை மேடவாக்கத்தில் இருக்கும் அவரது அலுவலகத்தில் சந்தித்தோம்:

"மனித மூளையைப் பற்றிய மருத்துவதுறையின் புதிய கண்டுபிடிப்புகளை நாம் தெரிந்து கொண்டால் நமது பழக்க வழக்கம், எண்ண ஓட்டம் முதலியவற்றில் பெருமளவு மாற்றத்தைக் கொண்டு வர முடியும். அப்படியொரு புரிதலை மக்களிடம் கொண்டு வர கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டதுதான் இந்த "மைன்ட் ஃபிரஷ்'.
இன்றைய காலகட்டத்தில் டீன்ஏஜ் பருவத்தை நல்லபடியாக கடந்து வருவது என்பது பெரிய சவால். அதிலும் டீன் -ஏஜ் பருவத்தில் இருக்கும் பிள்ளைகளை பத்திரமாக அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்துவது என்பது பெற்றோருக்கு மிகப்பெரிய சவால். காரணம், சினிமாவிலிருந்து வரும் கருத்துகள், நண்பர்கள் வட்டம் போன்றவை அவர்களை திசைதிருப்பிவிடுகிறது. மேலும், இன்றைய இளைஞர்களுக்கு எல்லாமே சுலபமாக கிடைத்துவிட வேண்டும். உடம்பை வருத்தி உழைக்கவோ, கஷ்டப்படவோ அவர்கள் தயாராக இல்லை.
அதிலும் இந்த ஆண்டு பளஸ்டூ முடித்துவிட்டு கல்லூரியில் சேர இருந்த பிள்ளைகளில் பலர் சொன்னது "எனக்கு எதிலுமே ஆர்வம் இல்லையே!, எனக்கு என்ன பண்ணனும்னே தெரியலையே'' என்பதுதான். இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம். அவர்களோட மனசு, மூளை, ஆற்றல் போன்ற எதுவுமே அவர்களுக்கு தெரியவில்லை என்பதுதான். இதனால் அவர்களைப் பற்றிய புரிதல்களை அவர்களுக்கு புரிய வைக்கவும், வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களையும் உணர வைக்கவும், வாழ்க்கையை எப்படி அடைவது? வெற்றிகளை எப்படி அடைவது என்பது குறித்தும் பயிற்சியளித்து வருகிறேன். இதைத்தவிர, கார்ப்பரேட் கம்பெனியில் வேலை பார்ப்பவர்களுக்கு, கிராமப்புறங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு, குடும்ப பிரச்னைகளில் சிக்கி மன அழுத்தத்தில் தவிக்கும் பெண்களுக்கு, லீடர்ஷிப் மேனேஜ்மென்ட், கம்யூனிகேஷன் ஸ்கில் போன்றவற்றை பயிற்சியளித்து மனதை இலேசாக மாற்றுவதுதான் எங்கள் வேலை.
எங்களுடைய ஒர்க் ஷாப்பில் ரொம்பவும் பிரபலமானது "பறக்கும் யானை' (Flying Elephant) என்ற இரண்டுநாள் ஸ்டடி ஸ்கில் பயிற்சி வகுப்பு. இதை சொன்னதுமே ""யானை பறக்குமா?'' என்றுதான் எல்லாரும் கேட்பார்கள். நான் அவர்களிடம் சொல்வது "யானை நிச்சயமா பறக்காது. ஆனால் மனசு பலமாக இருந்தால் அதனால் எவ்வளவு பெரிய சுமையையும் தூக்கிகிட்டு பறக்க முடியும்'' என்பதுதான் கான்சப்ட்.
தற்போதைய சூழலில் 13- 17 வயதுக்குள் இருக்கும் குழந்தைகள் நிறைய பிரஷரில் இருக்கிறார்கள். அதிலும் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு குழந்தைகளாக இருந்தால் ஒன்பதாம் வகுப்பில் இருந்தே டியூஷன், ஸ்பெஷல் கிளாஸ், வீட்டில் படிப்பது என பெற்றோர் பிச்சு புடுங்கிறார்கள். இதனால் அடிப்படையாகவே அவர்கள் மனதில் ஒருவித அழுத்தம் ஏற்பட்டுவிடுகிறது. இதனால், குழந்தைகள் மணி கணக்கில் புக் முன்னாடி உட்கார்ந்து இருக்கிறார்களே தவிர மனதில் பதியும்படி ஈசியாக படிப்பதில்லை.
இதனால் அவர்களின் மனதை பலப்படுத்தி, எப்படி படிக்க வேண்டும் என்ற புரிதலை ஏற்படுத்துவதுதான் "பறக்கும் யானை' பயிற்சி. இதன் மூலமாக நாலு மணிநேரம் விழுந்து விழுந்து படிப்பதை, ஒரு மணி நேரத்தில் அவர்களால் புரிந்து கொள்ள முடியும்.
அடுத்து பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் இடையில் உள்ள உறவை பலப்படுத்துவது. சில பெற்றோர் பிள்ளைகளை, அதை செய்யாதே, இதை செய்யாதே என விரட்டிக் கொண்டே இருப்பார்கள். குழந்தைகளின் ஆசைகளைப் புரிந்து கொள்ளாமல் தங்களின் எண்ணங்களை குழந்தைகள் மீது திணிப்பார்கள். இதனால் குழந்தைகளுக்கு சிறிது சிறிதாக பெற்றோர் மீதுள்ள புரிதல், பாசம் குறையத் தொடங்குகிறது. அவர்கள் வளர்ந்து சம்பாதிக்கும் திறன் வந்ததும் பெற்றோரை மதிக்க மறந்துவிடுகிறார்கள். இதுதான் முதியோர் இல்லங்கள் பெருகி வருவதற்கும் காரணம். இந்த எண்ணத்தை பிள்ளைகளிடம் இருந்து நீக்குவதும், பெற்றோர் என்ற இரண்டு உயிர்கள் தங்களுக்காக என்னென்ன தியாகம் செய்திருக்கிறார்கள் என்பதை குழந்தைகளுக்கு புரிய வைப்பதும் அடுத்த கான்சப்ட்.
அதுபோன்று இன்றைய இளம் பெண்களிடம் நிற வேற்றுமை, உடல் பருமன் போன்றவற்றினால் மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளவும் தயங்குவதில்லை. அதுபோன்ற மன உளைச்சல்களை நீக்குவது மூன்றாவது கான்சப்ட்.
ஒவ்வொரு ஒர்க்ஷாப்பைப் பொறுத்துதான் எத்தனை நாள் அல்லது எவ்வளவு நேரம் பயிற்சி தேவை என்பதை தீர்மானிக்கிறோம். பெற்றோருக்கான ஒர்க்ஷாப் என்றால் நான்கு மணி நேரம். டீன் -ஏஜ் பருவத்தினருக்கு மூன்றுநாள். கார்ப்பரேட்ஸ் பொருத்தவரை "எமோஷனல் இன்டலிஜன்ஸ்' அதில் ஒர்க் இன்டலிஜன்ஸ், டைம் மேனேஜ்மெண்ட், லீடர் ஷிப், "ஈகோ கிளாஷ்' என நிறைய பிரிவுகள் இருக்கிறது. இதனால் மூன்று மணி நேரம், மூன்று நாள், அல்லது வாரத்தில் ஒருநாள், இரண்டு நாள் கூட ஆகலாம். எனது ஒர்க்ஷாப் எல்லாம் சென்னை ஐஐடி ரிசர்ச் பார்க்கில் வைத்து நடத்துகிறேன். இதைத் தவிர வெளியூர்களுக்கும் சென்று பயிற்சி வகுப்புகள் எடுத்து வருகிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.