ஸ்விக்கி, பீட்ஸா, பர்க்கர்லாம் வந்ததால பாட்டி சுட்ட வடை போணியாகல!

ஸ்விக்கி, பீட்ஸா, பர்க்கர்லாம் வந்ததால பாட்டி சுட்ட வடை போணியாகல!

குழந்தைகளுக்கு இது தான் நல்லது, இதெல்லாம் கெட்டது என்று நினைத்து நான் சில விஷயங்களை அவர்களிடம் திணிக்கிறோம். உண்மையில் அப்படித் திணித்தலுக்கு ஆளாகும் குழந்தைகளின் உளவியலைப் பற்றி நாம் பெரிதாகக் கண்டு
Published on

தினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணலின் போது எழுத்தாளர் விழியன் உமாநாத் செல்வனுடனான உரையாடலில் ஒரு விஷயம் தெள்ளத் தெளிவாகிறது. நாம் நம் குழந்தைகளை மிகச்சரியாக  தவறாக வழிநடத்திக் கொண்டிருக்கிறோம் என்பது தான் அது. குழந்தைகளுக்கு இது தான் நல்லது, இதெல்லாம் கெட்டது என்று நினைத்து நான் சில விஷயங்களை அவர்களிடம் திணிக்கிறோம். உண்மையில் அப்படித் திணித்தலுக்கு ஆளாகும் குழந்தைகளின் உளவியலைப் பற்றி நாம் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. இது தவறான அணுகுமுறை என்பதோடு குழந்தைகளை குறிப்பாக சிறுவர்களைக் கையாள்வதில் நிச்சயம் பின்பற்றப் படக்கூடாத முறையுமாகும். சிறார் இலக்கியம், சிறுவர்களிடையே வாசிப்பின் மீதான நேசிப்பை ஊக்குவிப்பது எப்படி? சிறார் இலக்கியத்தை நீரூற்றி வளர்ப்பதில் அரசின் கடமை, படைப்பாளிகளின் பொறுப்புணர்வு, வாசகர்களின் சிறப்பான பங்கு என்ன? என்பன போன்ற மேலும் பல விஷயங்களை அறிந்து கொள்ள முழுமையான நேர்காணலில் விளக்கமாகக் காணுங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com