உங்களுக்கொரு உப்புமா கேள்வி... ரவை எதிலிருந்து கிடைக்குது பாஸ்!

ரவையில் ஒரே ஒரு விரும்பத் தகாத அம்சம்னா அதுல இருக்கற குளூட்டனைச் சொல்லலாம். குளூட்டன் ஃப்ரீ டயட் ஃபாலோ பண்றவங்க தயவு செய்து செமோலினா ரவையை தவிர்த்துடுங்க. 
உங்களுக்கொரு உப்புமா கேள்வி... ரவை எதிலிருந்து கிடைக்குது பாஸ்!

சண்டே மார்னிங், இன்னைக்கு நான்வெஜ் டே. மார்னிங் சமைக்க காய்கறி எல்லாம் எதுவும் கிடையாது. மத்யான, வேற ஹெவி லஞ்ச் சாப்பிடப் போறோம். அதனால காலையில லைட்டா உப்புமா சாப்பிட்டா போதும்...

ராத்திரி திடீர்னு கெஸ்ட் வந்துட்டாங்க, சாப்பிடாம வேற வந்துட்டாங்க, சட்டுன்னு அவங்களுக்கு என்ன சமைச்சுத் தர்றது, அட ரவை இருக்கப் பயமேன், உப்புமா கிளறிப் போட்டுற வேண்டியது தான் வேறென்ன...

இப்படி சகல அவசரகாலத்துலயும் நமக்கு கை கொடுக்கக் கூடிய நண்பன் தான் இந்த உப்புமா. 

இந்தில உப்மா, கன்னடத்துல உப்பிட்டு, மராட்டில உபீட்... இந்த உபீட் இல்லாம இன்னைக்குத் தமிழர்கள் இல்லைன்னு ஆயாச்சு. அந்த அளவுக்கு உப்புமா நம்ம மக்களோட இரண்டறக்கலந்துருக்கு. ஒன்னுமில்லைங்க.... நஷ்டத்துல ஓடுற நிறுவனங்களை எல்லாம் உப்புமாக் கம்பெனின்னு சொல்ற அளவுக்கு அந்த வார்த்தையோட புழக்கமும் அதன் எளிமையும் நம்மை அத்தனை ஈர்த்திருக்குன்னு சொல்ல வந்தேன். அவ்வளவு தான்.

சரி இப்போ உப்புமா கிளறனும்னா நமக்கு என்னல்லாம் வேணும்?

முதல்ல ரவை வேணும்.

இந்த ரவை எதிலிருந்து கிடைக்குதுன்னு எப்போவாவது நீங்க யோசிச்சிருக்கீங்களா?

உப்புமா பண்ண பாம்பே ரவை, சொஜ்ஜி ரவை இல்லனா பன்சி ரவை தான் நாம இதுவரைக்கும் யூஸ் பண்ணிட்டு இருக்கோம். சில சமயம் அரிதா மக்காச்சோள ரவை, சம்பா கோதுமை ரவை, அரிசி ரவையைக் கூட பயன்படுத்துவாங்க சிலர். எல்லா ரவையுமே ஈஸியா டைஜெஸ்ட் ஆகக்கூடியது தாங்கிறதால இதை குழந்தைகள் முதல் பெரியவங்க வரை யார் வேணும்னாலும் மார்னிங் பிரேக் பாஸ்டாவோ இல்லனா ஈவினிங் ஸ்னாக்ஸ் அதர்வைஸ் நைட் டின்னருக்கு கூட சாப்பிடலாம்.

பொதுவா ரவை கோதுமைல இருந்து கிடைக்கிறதா சொல்றாங்க. சாதா கோதுமைக்கும் அதாவது நாம சப்பாத்தி, பூரி சுட்டுச் சாப்பிட பயன்படுத்துறோமே அந்த கோதுமைக்கும் ரவை தயாரிக்கப் பயன்படுத்தற கோதுமைக்கும் என்ன வித்யாசம்னா, இந்த கோதுமை வெரைட்டி முன்னதைக் காட்டிலும் கொஞ்சம் கடினமா இருக்குமாம். அதை உடைக்கவோ, அரைக்கவோ கொஞ்சம் மெனக்கெடனும்னு சொல்றாங்க. துரம் வீட்னு சொல்லப்படக்கூடிய அந்த கடினமான கோதுமையை உடைச்சுக் கிடைக்கிற பொருளை செமோலினா ரவைன்னு சொல்றாங்க. இந்த ரவையைத் தான் நாம பெரும்பாலும் உப்புமாக் கிளற பயன்படுத்திட்டு இருக்கோம். இதுக்கு நம்மூர்ல பாம்பே ரவை, சொஜ்ஜி ரவை, பன்சி ரவைன்னு வெவ்வேறு பெயர்கள் வழங்கி வந்தாலும் எல்லாமே ஒரே பொருளைத்தான் சுட்டுதுன்னு இனிமே நல்லா ஞாபகம் வச்சுக்குங்க.

சிலருக்கு ரவை, மைதால இருந்து கிடைக்குதோன்னு சந்தேகம் இருக்கலாம். இல்லை மைதா வேற, ரவை வேற. கோதுமை மணிகள் பலமுறை அரைக்கப்பட்டு, சுத்திகரிக்கப் பட்டு கிடைக்கக் கூடிய நைஸான பெளடர் தான் மைதா. மைதாவுக்கு வெள்ளை நிறம் கிடைக்க அதில் கெமிக்கல் எல்லாம் சேர்க்கப்படுது. ரவையில் அப்படி எதுவும் சேர்க்கப்படுவது இல்லைங்கறதோட இதில் நார்ச்சத்தும் அழிக்கப்படுவதில்லைங்கறது இதன் சிறப்புகளில் ஒன்னு.

அடுத்தபடியா ரவையிலிருந்து கிடைக்கக் கூடிய ஹெல்த் பெனிஃபிட்ஸ் என்னென்னன்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க...

ரவையில் புரதச் சத்து அதிகம். ரவா உப்புமா சாப்பிடும் ஒவ்வொருமுறையும் நம் உடம்புல 6 கிராம் அளவுக்கு புரதச் சத்து ஏறும்னு சொல்றாங்க. அதுமட்டுமல்ல இதில் விட்டமின் பி சத்தும் அதிகம். அதாவது கைக்குத்தல் அரிசியில் இருக்கறதா சொல்லப்படக்கூடிய  ஃபோலேட் மற்றும் தயமின் சத்துக்கள் ரவையிலும் உண்டாம். இது நம்மை ஆற்றலோடு இயங்க வைக்கறதோட மூளைச் செயல்பாட்டையும் அதிகரிக்கச் செய்யும்ங்கறாங்க. செமோலினா ரவையின் அடுத்த சிறப்பு அதிலிருந்து கிடைக்கக் கூடிய செலினியம்ங்கற வேதிப்பொருள். இது மிகச்சிறந்த ஆண்ட்டி ஆக்ஸிடன்டாகச் செயல்பட்டு இதய நோய்களை கட்டுப்படுத்தும் காரணியா விளங்குது.

ரவையில் ஒரே ஒரு விரும்பத் தகாத அம்சம்னா அதுல இருக்கற குளூட்டனைச் சொல்லலாம். குளூட்டன் ஃப்ரீ டயட் ஃபாலோ பண்றவங்க தயவு செய்து செமோலினா ரவையை தவிர்த்துடுங்க. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com