முதல்ல ரசனையா கிஸ் அடிக்கக் கத்துக்கோங்க பாஸ்! (காணொளி)
By கார்த்திகா வாசுதேவன் | Published On : 19th January 2019 05:19 PM | Last Updated : 19th January 2019 05:19 PM | அ+அ அ- |

முத்தம் இந்த உலகில் எல்லோரும் விரும்பத்தக்க ஒரு அதிசய ரிலாக்ஸ் ஃபேக்டர்.
வழங்குபவருக்கும் சரி.. .பெற்றுக் கொள்பவருக்கும் சரி அதீத ஆனந்தத்தைத் தரக்கூடிய செயல் இது.
ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு சுவாரஸ்யமாகவும், ரசனையாகவும் முத்தமிடத் தெரியும் என்று யோசித்துப் பாருங்கள்...
முத்தம் வெறும் சடங்கல்ல!
மிக ரசனையாக முத்தமிடத் தெரிந்தவர்களுக்கு ஆகாயத்தை கையால் வளைத்து விட்டாற் போன்ற பெருமித உணர்வு கூட வரக்கூடும் என்கிறார்கள் விஷயமறிந்தோர்.
காற்றில் மிதப்பதைப் போலவோ...
கனவில் திளைப்பதைப் போலவோ...
கடலில் நீந்தித் துழாவுவதைப் போலவோ...
முத்தமிடும் போதோ... அதை வழங்கும் போதோ தோன்றவேயில்லை எனில் நீங்கள் இன்னும் சரியாக முத்தமிடக் கற்றுக் கொள்ளவில்லை என்று அர்த்தம்.
ஆகவே... முதலில் ஒழுங்காக முத்தமிடக் கற்றுக்கொள்ளுங்கள் மக்களே!