உலகில் அதிகப் பயனாளர்களைக் கொண்ட டெலிகிராம் செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இதுவரை 100 கோடி பேர் தரவிறக்கம் செய்திருக்கிறார்கள்.
வாட்ஸ் ஆப் , ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் கடந்த(அக்-4) இரவு உலகம் முழுவதும் 6 மணி நேரத்திற்கு மேல் செயல்படாமல் முடங்கியதால் டெலிகிராம் செயலியில் புதிதாக 7 கோடி புதிய பயனர்கள் இணைந்திருக்கிறார்கள். மேலும் சில சிக்கல்கள் உருவானதைத் தொடர்ந்து அடுத்தடுத்து அதிகப்படியான வாடிக்கையாளர்கள் டெலிகிராமை தரவிறக்கம் செய்யத் தொடங்கினர்.
இதையும் படிக்க| வாரத்திற்கு 5 மணிநேரமாவது உடற்பயிற்சி செய்யுங்கள்!
இதுகுறித்து டெலிகிராம் தலைமைச் செயலர் பாவெல் துரோவ் ‘2021-ஆம் ஆண்டு முதல் மாதம் 50 கோடி பேர் டெலிகிராம் சேவையைப் பயன்படுத்திக் கொண்டிருந்தனர். கடந்த அக்-4 ஆம் தேதி வாட்ஸ் ஆப் , ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் முடங்கியதால் டெலிகிராம் செயலியில் புதிதாக 7 கோடி பயனாளர்கள் இணைந்ததுடன் செயலியைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் அதிகரித்தது’ எனத் தெரிவித்தார்.
மேலும் அவர் ’தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் இதுவரை டெலிகிராம் செயலியை தரவிறக்கம் செய்தவர்களின் எண்ணிக்கை 100 கோடியைக் கடந்திருப்பதாகவும் , அனைத்துப் பயனாளர்களுக்கும் சேவையை வழங்க நிறுவனம் காத்திருக்கிறது எனக் கூறியதோடு அத்தனை தரவிறக்கங்கள் நிகழந்தாலும் செயலியை உபயோகப்படுத்துபவர்களின் எண்ணிக்கையில் பெரிய மாற்றம் நிகழவில்லை’ எனத் தெரிவித்திருக்கிறார்.
இருப்பினும் டெலிகிராம் செயலில் தற்போது புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டிருப்பது அதன் பயன்பாட்டு சதவீதத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக புதிய எமோஜிகள் , செய்திகளைப் பரிமாறும் இருவரின் திரை பின்பக்க படங்களை ஒரே மாதிரியாக வைத்துக் கொள்வது போன்ற வசதிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒரே நாள்.. அதே ஆள்கள்... இருவேறு கட்சிகள்!

ராணிப்பேட்டை மாவட்ட வணிகா் சங்க பேரமைப்பு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

ஓமலூா் தொகுதி: இரட்டை இலையா? முரசா? அதீத நம்பிக்கையால் மாறும் களம்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


