

கூகுள் நிறுவனத்தின் முக்கிய செயலியாகக் கருதப்படும் ‘கூகுள் ஃபிட்’ செயலியை இதுவரை 10 கோடி பேர் தரவிறக்கம் செய்திருக்கிறார்கள்.
பல புதுமையான செயலிகள் நாள் தோறும் அறிமுகமாகிக் கொண்டே இருந்தாலும் சில செயலிகள் அன்றாட வாழ்க்கைத் தேவையாக மாறியிருக்கிறது .அந்த வகையில் உடலை கவனிக்கும் செயலியான ‘கூகுள் ஃபிட்’ உலகம் முழுவதும் தனக்கான பயனாளர்களைத் தக்க வைத்திருக்கிறது.
இதையும் படிக்க | நாக்பூரில் கரோனா 3வது அலை வந்துவிட்டது: அமைச்சர் அறிவிப்பு
நடைபயிற்சி , ஓட்டப்பயிற்சிகளை மேற்கொள்ளும் போது எவ்வளவு தூரங்களை எத்தனை மணி நேரத்தில் கடந்திருக்கிறோம் என்பதையும் இதயத் துடிப்பின் அளவையும் மிகச்சிறந்த துல்லியத்துடன் தெரிவிப்பதால் உடலைப் பேண நினைப்பவர்களின் முதல் தேர்வாக இச்செயலி இருக்கிறது.
கடந்த 2014 ஆம் ஆண்டு அடிப்படைத் தரவுகளை மட்டும் காட்டக்கூடிய வகையில் உருவாக்கப்பட்ட இந்த செயலி கூகுள் ஃப்ளே ஸ்டோரில் வெளியானது. பின் 2018 ஆம் ஆண்டு நடக்கும் இடங்களின் வரைபடத்தை காண்பித்தல் போன்ற சில புதுபித்தல் வசதிகளுடன் வெளியான இச்செயலியை இதுவரை 10 கோடி பேர் தரவிறக்கம் செய்திருக்கிறார்கள்.
மேலும் இந்தாண்டும் (2021) சில மாற்றங்களைக் கொண்டு சிறந்த முறையில் செயலியை வடிவமைத்திருக்கிறார்கள் .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.