சுடச்சுட

  

  எடைக்குறைப்புக்கு தினமும் விரற்கடை அளவு காயகல்பம் எடுக்கலாமே!

  By கஸ்தூரி ராஜேந்திரன், தேனி.  |   Published on : 09th September 2019 04:53 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  fi_triphala1533205816

   

  சித்தமருத்துவர்கள் திரிபலா சூரணத்தைத் தான் காயகல்பம் என்பார்கள்.

  சர்வரோகநிவாரணியாகத் திகழும் திரிபலாவுக்கு இந்தப் பெயர் வெகு பொருத்தமே!

  மலை நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய் இந்த மூன்று மூலிகைக் காய்களையும் சம அளவில் எடுத்துக்கொண்டு வெயிலில் வைக்காமல் நிழலில் உலர்த்திப் பொடியாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பெயரை காயகல்பம் என்கிறார்கள் சித்தமருத்துவர்கள். இந்த சூரணத்தை விரற்கடை அளவோ அல்லது ஒரு சிறு டீஸ்பூன் அளவோ எடுத்து தினமும் படுக்கைக்குச் செல்லும் முன் உட்கொண்டால் போதும். உடல் எடை குறைப்புக்கு மட்டுமல்ல சீரான உடல் இயக்கத்துக்கும் இது பெரிதும் உதவுவதாக சித்த மருத்துவர்கள் கருதுகிறார்கள்.

  1. முதுமையை விரட்டி என்றும் இளமையான தோற்றத்துடன் இருக்க திரிபலா உதவும்.
  2. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க திரிபலா உதவும்.
  3. இதய நோய்கள் வராமல் தடுக்கும் சக்தியும் திரிபலாவுக்கு உண்டு.
  4. புற்றுநோய் செல்களை எதிர்க்கும் பண்பும் இந்த திரிபலாவுக்கு நிறையவே இருக்கு.
  5. செரிமானப் பிரச்னையைத் தீர்க்கும்.
  6. உணவுப் பாதையில் உள்ள நச்சுப்பொருட்களை நீக்கி குடலியக்கம் சீராக நடைபெற உதவுகிறது.
  7. மலச்சிகலில் அவஸ்தப்படுபவர்கள் திரிபலா சாப்பிட்டால் போதும், அது மிகச்சிறந்த மலமிழக்கியாகப் பயன்படுகிறது.
  8. வயிற்றினுள் இருக்கும் நாடாப்புழு, வளைப்புழுக்களை அகற்றவும் திரிபலா உதவும்.
  9. அல்சர் பிரச்னைக்கு திரிபலா மிகச்சிறந்த நிவாரணி. வயிற்றில் உள்ள புண்களை அகற்றுவதில் இது மிகச்சிறப்பாகச் செயல்படுகிறது.
  10. ஹீமோ குளோபின் எண்ணிக்கை குறைவாக இருப்பவர்கள் இதை உண்டால் ஹீமோகுளோபின் என்று சொல்லப்படக்கூடிய ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுவதோடு ரத்த ஓட்டத்தையும் இது சீராக்குகிறது.
  11. கணையத்தில் இன்சுலின் சுரப்பை அதிகரித்து குளுக்கோஸ் அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது. அதாவது திரிபலாவின் துவர்ப்புச் சுவை ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுகிறது.
  12. கெட்ட கொழுப்பைக் குறைத்து உடல் பருமனை கட்டுக்குள் வைக்கவும் இந்த திரிபலா சூரணம் உதவுகிறது. அதனால் தான் சொல்கிறார்கள், தினமும் விரற்கடை அளவோ அல்லது 1 டீஸ்பூன் அளவோ திரிபலா சூரணம் சாப்பிட்டு வந்தால் உடல் எடையைக் கட்டுப்படுத்த முடியும் என.
  13. சரும நோய்கள் எதுவும் வராமல் காக்கும் தன்மையும் திரிபலாவுக்கு உண்டு.
  14. மூச்சுத் தொந்திரவு இருப்பவர்களுக்கு சீரான சுவாசம் கிடைக்கவும் திரிபலா உதவுகிறது.

  சரி இவ்வளவு பலன் தரக்கூடிய திரிபலாவை எப்படி சாப்பிடறதுன்னு சிலருக்கு குழப்பம் வரலாம்.

  பொதுவில் இதை மழைக்காலத்தில் வெந்நீரிலும் வெயில்காலத்தில் வெறும் தண்ணீரிலும் குளிர்காலங்களில் நெய் மற்றும் தேனிலும் கலந்து சாப்பிடலாம் என்கிறார்கள். 

  திரிபலா சூரணத்தை வீட்டில் தயாரிக்க முடியாதவர்கள் நாட்டு மருந்துக் கடைகளில் வாங்கியும் பயன்படுத்தலாம். 

  சித்தமருத்துவர்களின் வழிகாட்டுதலின் படி, தினம் ஐந்து கிராம் சூரணம் எடுத்து 250 மில்லி கிராம் தண்ணீருடன் கொதிக்க வைத்து 60 மில்லியாகக் குறுக்கி வடிகட்டி காலை உணவிற்குப் பிறகு சாப்பிடுவது மிகவும் நல்லது.

  சரி இவ்வளவு பலன் தரக்கூடிய திரிபலாவை சாப்பிடக் கூடிய முறைகள் குறித்துச் பலருக்கும் குழப்பம் வரலாம்.

  பொதுவில் இதை மழைக்காலத்தில் வெந்நீரிலும் வெயில்காலத்தில் வெறும் தண்ணீரிலும் குளிர்காலங்களில் நெய் மற்றும் தேனிலும் கலந்து சாப்பிடலாம் என்கிறார்கள். 

  திரிபலா சூரணத்தை வீட்டில் தயாரிக்க முடியாதவர்கள் நாட்டு மருந்துக் கடைகளில் வாங்கியும் பயன்படுத்தலாம். 

  சித்தமருத்துவர்களின் வழிகாட்டுதலின் படி, தினம் ஐந்து கிராம் சூரணம் எடுத்து 250 மில்லி கிராம் தண்ணீருடன் கொதிக்க வைத்து 60 மில்லியாகக் குறுக்கி வடிகட்டி காலை உணவிற்குப் பிறகு சாப்பிடுவது மிகவும் நல்லது.

  தவிர இன்னும் சில வழிமுறைகளில் கூட திரிபலா சூரணம் எடுத்துக் கொள்ளலாம்.

  அதையும் தெரிந்து கொள்வோம்.

  தண்ணீரில் கரைத்து அருந்தும் முறை...

  2 டீஸ்பூன் திரிபலா சூரணத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து ஒரு இரவு முழுவதும் அப்படியே வைத்து விட வேண்டும். பின்னர் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் அந்தக் கரைசலை அப்படியே அருந்த விட வேண்டும்.

  தேனில் கலந்து அருந்தும் முறை...

  1 டீஸ்பூன் திரிபலா சூரணத்துடன் ஒரு சிறு துண்டு லவங்கப்பட்டை சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து ஒரு இரவு முழுவதும் அப்படியே வைத்து விட்டு காலையில் எழுந்ததும் 1 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து வெறும் வயிற்றில் அருந்த வேண்டும்.

  மேற்கூறியதில் எதுவுமே செய்ய முடியாதென்பவர்கள் பேசாமல் சித்தமருத்துவக் கடைகளில் கிடைக்கும் திரிபலா மாத்திரைகளை வாங்கிப் பயன்படுத்தலாம்.

  தினம் இரவு படுக்கைக்குச் செல்லும் முன் வெதுவெதுப்பான தண்ணீரில் 1 திரிபலா மாத்திரியைப் போட்டு விழுங்கினால் போதும் உடல் சுளுக்கெடுத்தாற் போல சுகமாகி பறப்பதற்குண்டான லகுத்தன்மை கொண்டதாகி விடும்.

  டிஸ்க்கி: கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அத்தனையும் பலர் பல சந்தர்பங்களில் பகிர்ந்த அனுபவக்குறிப்புகளே. இதை சகலருக்குமான மருத்துவ டிப்ஸுகளாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. கடுமையான உடல்நலக் கோளாறுகள் கொண்டவர்கள் அவரவருக்கான பெர்சனல் மருத்துவர்களை அணுகி தங்களுக்கான மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளவும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai