இணையத்தில் உடனுக்குடன் பலன் தரக்கூடிய வகையிலான விடியோக்களுடன் கூடிய DIY கிராஃப்டுகள் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றன. கண் சிமிட்டும் நேரத்தில் அவற்றைச் செய்து முடித்து விடலாம் என்பது மாதிரியான விளம்பரங்கள் வேறு! சரி என்று அவற்றில் சிலவற்றை நான் முயன்று பார்த்தேன். சில எளிமையாகவே இருந்தன. ஆனால் அவற்றில் சிலவகையானவை நேர விரயம், பொருள் விரயம், பண விரயம் என்ற ரீதியிலும் இருக்கின்றன என்பதையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். இதோ இந்த விடியோக்களைப் பாருங்கள். காண்பதற்குத் தான் அவை எத்தனை எளிமை. அழகு! ஆனால், செய்து பார்த்தால் தானே தெரிகிறது. அவை ஒன்றும் அத்தனை எளிமை இல்லை என்று. சில வகை கிராஃப்டுகள் செய்து பார்க்கும் போது ஒரே தடவையில் ரிசல்ட் சரியானபடி வந்து விடுகிறது. சில வகை கிராப்டுகளில் பலமுறை செய்து பார்த்தால் தான் இறுதியாக சரியான ரிசல்ட் வருகிறது. சில நேரங்களில் அடச்சே... இது சரியாவே வர மாட்டேனென்கிறதே என்று புலம்ப வைத்து பிராணனை வாங்கத்தக்க கிராப்டுகளும் கூட இருக்கின்றன.