சுடச்சுட

  

  டொமெட்டோ கெச்சப் பாக்கெட்டுகள் அதிகமாக மீந்து விட்டால் என்ன செய்வது?

  By கஸ்தூரி ராஜேந்திரன், தேனி.  |   Published on : 12th April 2019 02:50 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  tomato_kech_up

   

  அடிக்கடி பீட்ஸா, பர்கர் என்று ஆர்டர் செய்து உண்பவர்களா நீங்கள்? அப்படி ஆர்டர் செய்யும் போது கூடுதலாகக் கிடைத்த கெச்சப் பாக்கெட்டுகள் டைனிங் டேபிள் டிராயரை அடைத்துக் கொண்டு கிடக்கிறதா? அல்லது எப்போதோ வாங்கி வைத்த டொமொட்டோ கெச்சப் பாட்டில் சீக்கிரத்தில் தீர மாட்டேன் என்கிறதா? கவலை வேண்டாம். டொமொட்டோ கெச்சப் என்பது ஜங்க் ஃபுட்டுக்கு தொட்டுக் கொள்ள மட்டுமல்ல அதை வைத்துப் பிரமாதமாக வேறொரு உபயோகமான வேலையும் செய்து முடிக்க முடியும்.

  வெள்ளி அல்லது கல் வெள்ளியில் தயாரிக்கப்பட்ட ஜாடிகள், ஷோ கேஸ் அலங்காரப் பொருட்கள், பரிமாறும் தட்டுகள், டம்ளர்கள் என எல்லாவற்றையும் இந்த மீந்து போன டொமெட்டோ கெச்சப்புகளைக் கொண்டு சுத்தம் செய்ய முடியும். துருப்பிடித்த அல்லது நிறம் மாறிய மேற்கண்ட பொருட்களின் மீது மீந்து போன டொமேட்டோ கெச்சப்புகளை அப்ளை செய்து 5 முதல் 10 நிமிடங்கள் ஊற விட்டுப் பிறகு ஒரு டிஸ்யூ பேப்பர் கொண்டு அழுத்தித் துடைத்தால் போதும் துருவெல்லாம் காணாமல் போய் பொருட்கள் பளிச்சென்று ஆகி விடும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai